மார்க் ஆண்டனி திரை விமர்சனம் !!
வினோத் குமார் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா. அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி, சுனில், நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் மார்க் ஆண்டனி.
விஞ்ஞானியான சிரஞ்சீவி,செல்வராகவன் தொலைபேசி டைம் ட்ராவல் கருவியை கண்டுபிடிக்கிறார்.
இதன் மூலம் கடந்த காலத்திற்கு போன் பேசி எதிர்காலத்தை மாற்ற முடியும். இந்த கருவி, 1975களில் கேங்ஸ்டர்களாக வலம் வரும் ஜாக்கி பாண்டியன் -எஸ்.ஜே.சூர்யாமற்றும் – விஷால் ஆகிய இருவரையும், ஜாக்கியின் மகனான மதன் பாண்டியனையும், ஆண்டனியின் மகனான மார்க் ஆண்டனியின் வாழ்க்கையையும் எப்படி பல்வேறு திருப்பங்களு க்கு உள்ளாக்குகிறது .
முதல் பாதியில், கதை கொஞ்சம் கூட ஒன்றாமல் எங்கேயோ போவது போன்ற எண்ணத்தை தோன்ற வைக்கிறது. இடைவேளை பின்பு படக்கதை தீயாய் பற்ற ஆரம்பிக்கிறது.
அதன் பின் வரும் இரண்டாம் பாதி, மார்க் ஆண்டனியின் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது.
எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார் என்பதற்காகவே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது. வழக்கம் போல் இவர் அரக்கத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உடல் மொழி, வசன உச்சரிப்பு, டைமிங் காமெடி, கதாபாத்திரங்களுக்கு இடையே காட்டும் வித்தியாசம் என அனைத்து வகையிலும் சதம் அடித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாதான் இப்படத்தை நிலைநிறுத்தும் மாபெரும் தூண் என்று சொல்லலாம்.
அதேசமயம் ஹீரோவான விஷால் தனக்கு கொடுக்கப்பட்ட இரு கதாபாத்திரங்களுக்கு இன்னும் சற்று வித்தியாசத்தை கூட்டி நடித்திருக்கலாம்.
இதில் நடித்த செல்வராகவன், அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி, சுனில், நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன் உள்ளிட்டோர் நன்றாகவே நடித்துள்ளனர். சில்க் ஸ்மித்தாவாக நடித்த விஷ்ணு காந்தி பிரியா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இனி நிறைய படங்களில் இவரை பார்க்கலாம்.
படத்தில் வெறும் மூன்றே மூன்று பாடல்கள் . பாடல்கள் பற்றி பேச எதுவும் பெரிதாக இல்லை. பழைய பாடல்களை சூப்பராக ரீமேக் செய்து, படத்திற்கு தனி கவனத்தை கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் பின்னணி இசையில் ஏமாற்றியுள்ளார்.
சிறப்பாக பணியாற்றியபடக் குழு
டைம் டிராவல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஒளிப்பதிவு தொடங்கி படத்தொகுப்பு, ஆடை வடிவமைப்பு, கலை வடிவமைப்பு என அனைத்தும் சிறப்பாக உள்ளது.
மொத்தத்தில்
காமெடி ஓட்டத்தில் இப்படம்*