’மேன் ஆஃப் மாஸ்’ நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 25, 2026 அன்று வெளியாகிறது!

Share the post

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 25, 2026 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் பிரஷாந்த் நீல் இந்தப் புதிய படத்தில் என்.டி.ஆருக்கு இன்னும் அதிக மாஸ் சேர்க்க உள்ளார். மதிப்புமிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய திரை அனுபவத்தை கொடுக்கும்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கோசரராஜு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக சலபதி பணிபுரிகிறார்.

தொழில்நுட்ப குழு:
தயாரிப்பு வடிவமைப்பு: சலபதி,
ஒளிப்பதிவாளர்: புவன் கவுடா,
இசை: ரவி பஸ்ரூர்,
தயாரிப்பாளர்கள்: கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கோசராஜு,
எழுத்து மற்றும் இயக்கம்: பிரசாந்த் நீல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *