மால்
திரை விமர்சனம்!!
சிவராஜ்.ஆர், கார்த்திக் எம்.பி ஆகியோரது தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினேஷ் குமரன் இயக்கத்தில், ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் படம் தான் மால்.
கஜராஜ், அஸ்ரஃப், தினேஷ் குமரன், சாய்கார்த்தி, கவுரி நந்தா, விஜே பப்பு, ஜெய் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு
சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை தனிப்படை அமைக்கிறார்கள் .
சோழர் சிலையை கடத்த ஒரு கும்பல் திட்டம் போடுகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜராஜ் வீட்டில் திருடுவதற்கு அஸ்ரப் மற்றும் தினேஷ் குமரன் திட்டம் போடுகிறார்கள்.
ஜெய்யிடம் காதலை சொல்ல விஜே பப்பு முயற்சிக்கிறார்.
ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இவர்கள் சோழர் சிலையால் ஒரு வட்டத்திற்குள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட, அதனால் இவர்கள் எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்அதில் இருந்து மீண்டார்களா, இல்லையா.
சோழர் சிலை என்னவானது.
கஜராஜ், அஸ்ரஃப், தினேஷ் குமரன், சாய்கார்த்தி, கவுரி நந்தா, விஜே பப்பு, ஜெய் அனைவருக்கும் நடிப்பும் சிறப்பாக உள்ளது.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், சாய் கார்த்திக்கின் மனைவியாக நடித்திருக்கும் கெளரி நந்தா இருவர் மட்டுமே தெரிந்த முகங்களாக இருக்கிறது .
திருடர்களாக நடித்தா அஸ்ரப் , தினேஷ் கார்த்திக் யின் கூட்டணி சிறப்பு
கஜராஜின் நடிப்பு பெரிய அளவில் கைகொடுத் திருக்கிறது.
சாய் கார்த்தியின் வில்லத்தனம் கலந்த வேடத்தில் நம்மை ஈர்க்கிறார்.
சாய் கார்த்திக்கின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை கெளரி நந்தாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்ற தான்
ஒளிப்பதிவு படத்தொகுப்பு இசை
சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்குநர் தினேஷ் குமரன், அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார்.
மொத்தத்தின்
*பரபரப்பு நிறைந்த மால் கா உள்ளது.
*