
“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:- ரியோ, மாளவிகா மனோஜ், ஆர்.ஜே.
விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர், ஏ வேகேஷ்
மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- கலையரசன் தங்கவேல்.
மியூசிக் :- வெடிகாரன்பட்டி எஸ்.சக்திவேல். (பின்னணிசை சித்து).
ஒளிப்பதிவு :-மாதேஷ் மாணிக்கம்.
தயாரிப்பாளர்கள்:- முருங்கை புரொடக்ஷன்ஸ்.
நாயகன் ரியோ ராஜுக்கும், நாயகி
மாளவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது.
மகிழ்ச்சியான இந்த தம்பதியின் வாழ்க்கையில்
திடீரென்று குறுக்கிடும் ஈகோ பிரச்சனைகள்
வளர்ந்து விவாகரத்து வரை போகிறது. மாளவிகா விவாகரத்து கேட்டு
நீதிமன்றத்தை நாடி வருகிறார். ஆனால், ரியோ ராஜ் அவருடன்
இணைந்து வாழ விரும்புவதாக சொல்ல விரும்பு
கிறார், ஆனாலும் விவாகரத்து
கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நாட்கள் மெல்லமா நகர்கின்றன.
என்னதான் சிக்கல் வந்தாலும் விவாகரத்து பெற்றே தீருவேன் என்ற
பிடிவாதம் கொள்கிறார்
மாளவிகா. இப்படி இருக்க, அவருடன்
சேர்ந்து வாழ்வது தான் ரியோ ராஜ் உறுதியாக இருக்கிறார்.
இறுதியில், இருவரில் யார் வெற்றி பெற்றது ? என்பதை
தற்போதைய காலக்கட்ட தம்பதிகளின் வாழ்க்கைக்கு
நெருக்கமாகவும், கலகலப்பாகவும் சொல்வதுதான்
“ஆண் பாவம் பொல்லாதது”என்பது
திரைப்பட கதைக்களம்.
மேலும் கண்டறிவது
இசையும்
ஆண்பாவம்
தம்பதிகள்
ஆண் பாவம் இசையில் இசை
பிச்சைக்காரன் 2
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா முழு படத்தையும் தங்களது நடிப்பால் தூக்கி நிற்கிறார்கள்.
இருவருக்கும் இடையிலான உள்ள வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட அனைத்தும் மிக
சிறப்பாக செயல்பட்டு அனைத்து ஒவ்வொரு காட்சிகளையும் நெஞ்சத்தை கிள்ளி
வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் கள்.
இருவருக்கும் தினம் தினம் ஏற்படும் சிறு சிறு சச்சரவு சண்டைகள் அனைத்தும், தற்போதைய
காலக்கட்ட தம்பதிகள் கடந்து போகும் சம்பவங்கள் என்பதால்,
பார்வையாளர்களை கைதட்டி, விசில் அடித்து கொண்டாட வைப்பதோடு, இருவரது ஜோடி
பொருத்தம் மற்றும் அவர்களது துள்ளல்
நடிப்பு, உடல்மொழி ஆகியவை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது.
வழக்கறிஞராக நடித்திருக்கும் விக்னேஷ்காந்த்,
வழக்கமான நகைச்சுவையோடு செண்டிமெண்டாக நடித்து கலங்கடிக்கவும் செய்திருக்கிறார்.
வழக்கறிஞராக நடித்திருக்கும் ஷீலாவும் தனது
கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும்படி நடித்திருப்பதுடன்,
விக்னேஷ்காந்த் போல், பார்வையாளர்களை கலங்கடித்து மனதில் நின்றுவிடுகிறார்.
விக்னேஷின் உதவியாளராக நடித்துள்ளார் ஜென்சன் திவாகரின் அறியாமை மற்றும்
அவர் அடிக்கும் காமெடிகள் அனைத்தும் சிரிப்பு
சத்தத்தால் திரையரங்கமே அதிர வைக்கின்றார்கள்.
சித்து குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும்
இனிமை. பின்னணி இசையும் படத்திற்கு
பலம் சேர்க்கும் வகையில் பயணிக்கிறது.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா காட்சிகளை பளிச்சென்று
படமாக்கி பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார்.
இளம் தம்பதியின் வாழ்க்கையை மையக்கருவாக வைத்துக் கொண்டு
கதை எழுதியிருக்கும் சிவகுமார் முருகேசன் மற்றும் கலையரசன் தங்கவேல், தம்பதி
இடையிலான ஈகோ, அதனால் ஏற்படும் விளைவுகளை கலகலப்பான
முறையில் காட்சிப்படுத்தி சிரிக்க வைப்பதுடன்,
இரண்டாம் பாதியில் யோசிக்க வைக்கும் விதத்தில்
திரைக்கதையை கையாண்டிருக்கிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு, சோசியல் மீடியா என்றால் என்ன ? என்பது கூட தெரியாத பல
பெண்கள், திருமணத்திற்குப் பிறகு கணவர்கள் கொடுக்கும்
சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு சோசியல் மீடியாவில்
மூழ்கியிருப்பதும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை கலகலப்பான காட்சிகளாக
கையாண்டிருக்கும் இயக்குநர் கலையரசன் தங்கவேல்,
தற்போதைய காலக்கட்ட தம்பதிகளை மட்டும்
இன்றி இளைஞர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.
படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் தற்போதைய
காலக்கட்டத்திற்கு ஏற்றதாக மட்டும் இருப்பதால், அனைவரது குடும்பத்திலும் நடப்பவைகளாகவும்,
உண்மைக்கு நெருக்கமாக சம்பவம் இருப்பதால்,
பார்வையாளர்களை நிச்சயம் பார்க்க வைக்கும்
படம் பார்த்தத்தில், ‘ஆண் பாவம் பொல்லாதது’ புதிய திருமணம் ஆன தம்பதியர்கள்
கண்டிப்பாக நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம் திரையரங்குகளில் காணுங்கள். ஆண்
பாவம் வெல்லும்.
பெண்களே,!!! “வீண்வம்பு ஈகோவை” விட்டு ஒழியுங்கள்.