“வேலன்” படத்தில் மலையாளி வேடமேற்கும் நடிகர் சூரி !
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு அவதாரங்களில், ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். தமிழின் அதிமுக்கிய இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் சூரி. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் முகேன் நடிக்கும் “வேலன்” படத்தில் மலையாளி அவதாரத்தில் அசத்தவுள்ளார். தனது கதாப்பாத்திரத்திற்காக சரளமாக மலையாளம் பேச, மலையாளம் கற்று வருகிறார் சூரி. இப்படத்தில் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகராக ‘மம்முக்கா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.





Sky Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் இப்படத்தினை தயாரிக்கிறார். முன்னணி இயக்குநர் சிவாவின் உதவியாளர் கவின் இப்படத்தினை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு, தம்பி ராமையா, சூரி, ஹரீஷ் பேரடி, ஶ்ரீ ரஞ்சனி, சுஜாதா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். கோபி ஜகதீஷ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார்.