
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மேடீஸ் விருது!
Madras Advertising Club-ன் Maddy’s விருதுகள் 2024 விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விளம்பரத் துறையின் மிகச்சிறந்த திறமைகளை அங்கீகரிக்கும் இவ்விழாவில் விளம்பர மற்றும் தொழில் நிறுவனங்ளைச் சார்ந்தவர்களும் ஊடகத்துறையினரும் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு 98 பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இதில் Media & Entertainment, Promos – Non Fiction பிரிவில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வெண்கல விருது கிடைத்துள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக 1 கோடி Subscriber-களைப் பெற்ற தமிழ் செய்தி யூட்யூப் சேனல் எனும் பெருமையை புதிய தலைமுறை கடந்த 2023-ஆம் ஆண்டு பெற்றது. இதற்காக வெளியிடப்பட்டிருந்த Promo Video-விற்காக, புதிய தலைமுறையின் மார்க்கெட்டிங் பிரிவுக்கு Advertising Club-ன் விருது கிடைத்துள்ளது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.