சிம்பு தன் நண்பனின் திருமணத்திற்காக துபாயில் இருந்து கோயம்புத்தூருக்கு வருகிறார். சிம்புவின் நண்பன் பிரேம்ஜி திருமணம் செய்யப்போகும் பெண்ணை கடத்தி அவளை காதலிக்கும் தன் நண்பன் பிரேம்ஜியுடன் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார். திட்டமிட்டபடி திருமணப் பெண்ணை கடத்தி செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யாவிடம் சிம்பு மற்றும் நண்பர்கள் ஒரு விபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். சிம்பு முதலமைச்சரை சுட்டு கொல்கிறார்.
சிம்பு விமானத்தில் மீண்டும் பயணிக்கிறார். இந்த நிகழ்வு மீண்டும் நடக்கிறது. அப்போது, டைம் லூப்பில் தான் சிக்கி இருப்பதை சிம்பு உணர்கிறார்.
சிம்பு இதிலிருந்து விடுபட முயற்சி செய்கிறார். சிம்பு டைம் லூப்பில் இருந்து விடுபட்டாரா? முதலமைச்சரையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், உதயா, வாகை சந்திரசேகர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
சிம்பு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இருவருக்கும் நடக்கும் காட்சிகள் தான் அதிகம்.
வெங்கட் பிரபு, சவாலான கதையை எடுத்து சிறப்பான படம் எடுத்துள்ளார்.
குழப்பம் இல்லாத திரைக்கதை என கைத்தட்டல் பெற்றிருக்கிறார் வெங்கட் பிரபு. படத்திற்கு பெரிய பலம் கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு. தெளிவான திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.
கதாநாயகி அனைவருக்கும் குளிர்ச்சியாக நடித்துள்ளார்
ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு சிறப்பு. யுவனின் இசை சிறப்பு
‘மாநாடு’ மிக சிறப்பு