
மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் திரு.எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் திரு.புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம்.
சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 – வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவுப்பரிசாக சபாநாயகருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 4 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

சபாநாயகர் உரை
ஸ்ரீ ஓம் பிர்லா தனது பட்டமளிப்பு விழா உரையில், திரு எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மறைந்த திரு. ஐசரி வேலனின் பாரம்பரியத்தை தொடரும் அவரது மகனான டாக்டர். ஐசரி கணேஷின் தொலைநோக்கு தலைமையின் கீழ் பல்கலைக்கழகம் முன்னேற்ற பாதையில் பயணிக்கின்றது என பாராட்டினார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வடிவமைப்பதில் டாக்டர் கணேஷின் அவர்களின் பங்கு அளப்பரியது என்றும் பல்கலைக்கழகத்தில் பல சிறப்பு மையங்களை உருவாக்க வழிவகுத்த சிந்தனை மற்றும் அணுகுமுறையை ஆகியவற்றை கண்டு வியக்கிறேன் என்றார்.

“இன்று எனக்கு முன்னால் தன்னம்பிக்கையுடன் அமர்ந்துள்ள பட்டதாரிகளைப் பார்க்கும்போது, நான் மாணவர்களை மட்டுமல்ல, எதிர்காலத் தலைவர்களையும்பார்க்கிறேன். நீங்கள் ஒரு ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) தூண்கள், மேலும் நமது தேசத்தை 21 ஆம் நூற்றாண்டிற்கு வழிநடத்தும் பொறுப்பு இப்போது உங்கள் மீது உள்ளது” என்று கூறினார்.
பணிவு மற்றும் நேர்மையின் முக்கியத்துவத்தை போதித்தவர், தமிழகத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். அவரின் வழி நடந்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் செலுத்துவோம் என்றார்.
இந்த நிகழ்வில் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட திரு. எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அதேபோல பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் உலக அரங்கில் சாதிக்க வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் திருமிகு புல்லேலா கோபிசந்த் அவர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இவர் இந்தியாவில் பெரிதும் பிரபலமடையாத பேட்மிண்டன் விளையாட்டில் கால்பதித்து சாதித்ததோடு தன் மாணவர்களையும் வெற்றி கனியை எட்ட உத்வேக படுத்தினார். இவரின் இந்த சாதனையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கியுள்ளது . இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

அதேபோல் தொழில்துறையில் குறுகிய காலத்தில் 700 கடைகளுடன் உலகளவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான், நேச்சுரல்ஸ் குழும அழகு நிலையங்களின் உரிமையாளர் திரு.சி.கே.குமரவேல். 1000 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதே லட்சியமாக கொண்டு செயல்பட்டுவரும் திரு சி கே . குமரவேல் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.
டாக்டர் ஐசரி கே கணேஷ் – நிறுவனர் வேந்தர், டாக்டர் ஏ ஜோதி முருகன் இணை வேந்தர் (திட்டமிடல் மற்றும் மேம்பாடு), டாக்டர் ஆர்த்தி கணேஷ் – இணை வேந்தர் (நிர்வாகம்), டாக்டர் ஃப்ரீத்தா கணேஷ் – துணைத் தலைவர், வேல்ஸ் குழுமங்கள் , டாக்டர். ஸ்ரீமன் நாராயணன் – துணைவேந்தர், டாக்டர்.எம்.பாஸ்கரன் – சார்பு – துணைவேந்தர், டாக்டர்.பி.சரவணன் – பதிவாளர் மற்றும் டாக்டர்.ஏ.உதய குமார் – தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
வேல்ஸ் பல்கலைக்கழகம் பற்றி சிறு குறிப்பு
2008 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் MHRD ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட VISTAS, சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் மூன்று வளாகங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பல்துறைப் பல்கலைக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.
மருத்துவம், நர்சிங், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, கடல்சார் ஆய்வுகள், சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் UG முதல் Ph.D வரையிலான திட்டங்களை வழங்குகிறது . இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் மேலும் ஒரு சாதனையாக மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவால் NAAC A++ தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.