இன்றே லாகின் செய்யுங்கள், Sony LIV இல் ‘குவிஸ்ஸர் ஆஃப் தி இயரில்’ பங்கேற்று சவாலில் வென்றிடுங்கள்!

Share the post

இன்றே லாகின் செய்யுங்கள், Sony LIV இல் ‘குவிஸ்ஸர் ஆஃப் தி இயரில்’ பங்கேற்று சவாலில் வென்றிடுங்கள்!

சென்னை: Sony LIV இன் ஆர்வத்தைத்தூண்டும் அற்புதமான வினாடி வினா சவால் – குவிஸ்ஸர் ஆஃப் தி இயர் (QOTY) தொடங்கியுள்ளது. இந்த வினாடி வினா பொது அறிவு மற்றும் சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்து இளம் நெஞ்சங்களுக்கு சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வினாடி வினா நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, லீடர்போர்டில் முதலிடம் பெற பலர் போராடுவதையடுத்து பெரியளவில் வளர்ந்துள்ளது. 2023–24 கல்வியாண்டிற்கான IX முதல் XII (9 முதல் 12 வரை) மாணவர்களை இலக்காகக் கொண்டு, QOTY வினாடி வினாக்களை அனைவருக்கும் திறந்துள்ளது. போட்டி முழுவதும், பங்கேற்பாளர்கள் உற்சாகமான தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள், இதில் சோனி LIV இல் இடம்பெறும் வாய்ப்பும் அடங்கும். QOTY இந்தியாவின் கிராண்ட் குவிஸ் மாஸ்டர் சித்தார்த்தா பாசுவால் இயக்கப்படுகிறது, மேலும் அனிதா கவுல் பாசு மற்றும் ட்ரீ ஆஃப் நாலெட்ஜ் டிஜிட்டலில் (டிஜிடாக்) குழுவுடன் இணைந்து வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு, QOTY நாடு முழுவதும் உள்ள சகாக்களுக்கு எதிராக அவர்களின் திறன்களையும் அறிவையும் சோதிக்க ஒரு தளத்தை வழங்குகிறது. இறுதி வெற்றியாளர்களுக்கு 1 கோடி கல்வி உதவித்தொகை மற்றும் “குவிஸ்ஸர் ஆஃப் தி இயர் ” என்ற மதிப்புமிக்க பட்டம் வழங்கப்படும். இந்த வினாடி வினாவின் நோக்கம் அவர்களின் பள்ளி பாடத்திட்டம் மற்றும் பொது அறிவை மேம்படுத்துவதே ஆகும்.

Sony LIV இணையதளம் – www.sonyliv.com/qoty இல் பயனர்கள் இதன் வடிவம், கட்டமைப்பு, தகுதி, விளையாட்டு, பதிவு செய்வதற்கான படிகள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பற்றிய அனைத்து தகவல்களையும் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *