‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பாராட்டிய எம். எஸ். தோனி
தோனி எண்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பான ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, ”இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியுடனும், ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடனும் இருந்த தருணங்கள்.. என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள்” என குறிப்பிட்டிருக்கிறார்.
‘எல். ஜி. எம்’ படத்தின் ஒவ்வொரு புதிய தகவல்களும் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்பட வைத்திருக்கிறது. மேலும் புதிய தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். மைதானத்தில் ‘கிரிக்கெட் மேதை’ தோனியின் பரபரக்கும் கிரிக்கெட்டை கண்டு ரசித்தது முதல்… அவர் ‘எல் ஜி எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது வரை.. ‘எல் ஜி எம்’ படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
‘எல். ஜி. எம்’ ஒரு ஃபீல் குட் பேமிலி எண்டர்டெய்னர். இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி டோனி வழங்குகிறார். விகாஸ் ஹசிஜா தயாரிப்பாளராகவும், பிரியான்ஷு சோப்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.