
கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்பட விமர்சனம்!!
நடித்தவர்கள் :- ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சாகா, சத்யதேவி,
ஜஸ்வர்யா தத்தா லியோ சிவகுமார், நவீன் ஆகியோர்.
டைரக்ஷன் :- சீனு ராமசாமி .
மியூசிக் :- என்.ஆர்.ரகுநந்தன்
ஒளிப்பதிவு :-அசோக்
ராஜ்
தயாரிப்பாளர்கள் :- டாக்டர். டி .அருள் ஆனந்து, மாத்யூ அருள் ஆனந்து.
கணவன் – ராணுவத்தில் பணியாற்றி விட்டு தனது ஊருக்கு வந்து
மனைவியை பாத்து, அதிர்ச்சியடைகிறார். குடும்பத்தில் தகராறு வர இதனால் குடும்பத்தில் பிளவு
ஏற்பட்டு தனது தாயின் விட்டில், பிள்ளைகளை விட்டு போகிறார்.
மனைவிக்கு இடையே ஏற்படும் குடும்பம், மற்றும் கள்ள காதல் பிரச்சனையால் சிறுவயதில்
கதா நாயகன்
ஏகனும், அவரது தங்கையும் கைவிடப்படுகிறார்கள்.
ஆதரவளித்த பாட்டியும் இறந்துவிட, அவர்களுக்கு
கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபு அடைக்கலம் கொடுக்கிறார்.
பெற்றோர் இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்க
நினைக்கும் நாயகன் ஏகனின் வாழ்க்கையில் புது புது உறவுகள் வருகிறார்கள். அவர்கள்
மூலம் அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா?,
என்பதை விளக்கும் படம்…
விட்டுச் சென்ற பெற்றோர் என்ன ஆனார்கள்? என்பதை
மனித உணர்வுகளை மேம்படுத்தும் படைப்பாக நமக்கு
கொடுத்திருப்பது தான் இந்த‘கோழிப்பண்ணை செல்லதுரை’.
செல்லதுரை என்ற கதாபாத்திரத்தில் புதிய நாயகனாக
நடித்திருக்கும் ஏகன், அறிமுகம் படம் போல் அல்லாமல்
கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அசல்
கிராமத்து இளைஞராக வலம் வருபவர், பாசம், காதல், சோகம் போன்ற ஆகிய அனைத்துமே
உணர்வுகளையும் அள்ளி வெளிப்படுத்தக்கூடிய கனமான
கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகாவுக்கு சின்ன
வேடம் தான் என்றாலும், வெகுளி தானமாக
அதை நிறைவாக செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.
யோகி பாபு தனது வழக்கமான காமெடி கலாட்டாவை எதுவும் இல்லாமல் அதை ஒதுக்கி
வைத்துவிட்டு, அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரத்தில்
நேர்த்தியாக நடித்து, தன்னால் இப்படிப்பட்ட
குணச்சித்திர வேடங்களையும் கையாள முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்யாதேவி, கதையின்
மையம் என்பதை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவக்குமார்,
நவீன், குட்டிப்புலி தினேஷ் என்ற பாத்திரத்தில் நடித்தவர் தரமான கிராமத்து வட்டறமொழி வார்த்தைகளை கையாளும் திரையரங்குகளில் கைதட்டல் பெறுகிறார்.
வேடங்களில் நடித்திருப்பவர்கள்
தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ் தனது கேமரா மூலம் பார்வையாளர்களுக்கு கதை நடக்கும்
கிராமத்தில் பயணித்த அனுபவத்தை ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் அனைத்தும் பாடல்கள் கேட்கும்
போது ராகம். பின்னணி இசை அளவையும் வெகுவாக தரமாக
கொடுத்திருக்கிறார்.
தனது ஒவ்வொரு படங்களிலும் மனித உணர்வுகள் பற்றி பேசி
வரும் இயக்குநர் சீனு ராமசாமி, இந்த படத்தில் மனித உணர்வுகளுடன்,
ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை வைத்துக்கொண்டு ஒரு
தெய்வீக பயண உணர்வை பார்வையாளர்களிடம்
கடத்த முயன்றிருக்கிறார். அவரது முயற்சி சில
இடங்களில் தொய்வடையாமல் இருக்க படத்தின் பலம்
படத்தின் மையமே அண்ணன் தங்கை பாசம் தான் என்றாலும்
அதை காட்சியின் மூலம் ரசிகர்களிடம் தவறாமல் இருக்க
இயக்குநர் சீனு ராமசாமி, கடைசி
நிமிட காட்சிகள் மூலம் படத்தில் நிலையில் இருக்கும் போது
குறைகளை மறந்து, பார்வையாளர்களை கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில்,
இந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ தரமான
கதாபாத்திரத்திர
படைப்பு போல் திரைக்கதையும், காட்சிகளும்
நிறைந்திருக்கும் படம் மிகப்பெரிய வெற்றியை கொண்டாடும்,
கதையின் ஆரம்பம் முதல் கடைசி வரை மௌனமாக நேர்த்தியாக போகிறது.