
கிச்சன் கேபினட்”
அன்றாட அரசியல் நிகழ்வுகளை நையாண்டியுடன் பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சிதான் கிச்சன் கேபினட்.
அரசியல் களத்தில் பம்பரமாகச் சுற்றிவரும் தலைவர்களின் கருத்துக்களை சுவாரசியமாக மாற்றி இளைஞர்களைக் கவரும் வகையில் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து புதுப்பொலிவுடன் வழங்கி வருகிறது கிச்சன் கேபினட். தனது தனித்த மொழி நடையில் ஒளிபரப்பாகும் இடிதாங்கி ,அனைத்துவிதமான மக்களுக்கும் பிடித்த ஒரு பகுதியாக வலம் வருவது இதன் சிறப்பு. அதனுடன் நகைச்சுவை கலந்த அரசியல் திரைப்படமும் கலந்திருப்பது சிறப்பம்சம். இப்படிப் பல்வேறு சிறப்புகளுடன் கிச்சன் கேபினட் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.