கிஸ்” (Kiss review) திரைப்பட விமர்சனம்!

Share the post

“கிஸ்” (Kiss review) திரைப்பட விமர்சனம்.

நடித்தவர்கள் :- கவின், ப்ரீத்தி அஸ்ரானி, பிரபு, விடிவி.கணேஷ்,

ஆர்.ஜெ.விஜய், ராவ் ரமேஷ், தேவயானி, சக்தி ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :-சதீஷ் கிருஷ்ணன்.

மியூசிக் : –
ஜென் மார்ட்டின்.

ஒளிப்பதிவு:-ஹரிஷ்கண்ணன்.
படத்தொகுப்பு :-
ஆர்.பி.பிரனாவ்.

தயாரிப்பாளர்கள் :- ரோமியோ பிக்சர்ஸ் – ராகுல்.

காதல் பிடிக்காத ஒரு நாயகன் கவினுக்கு, காதல் ஜோடிகள்

முத்தம் கொடுப்பதை பார்த்துவிட்டால், அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்

போகிறது என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆற்றல் கிடைக்கின்றன.

இதனால், காதலர்கள் முத்தமிடுவதை பார்க்கும் போது அவர்களது

எதிர்காலத்தை அறிந்து, அவர்களை பிரிக்கும்

செயல்களில் ஈடுபடுகிறார்.கவின்
நாயகன்.

இதற்கிடை நாயகி ப்ரீத்தி இவர் ஒரு டான்ஸ் டீச்சர். அஸ்ரானியுடன் நட்பாக பழகும் எற்பட கவினுக்கு அவர் மீது காதல் மலர்கின்றன.

ப்ரீத்திக்கும் உண்மையில் கவின் மீது காதல் மலர்கிறது. இருவரும் காதலை சொல்லிக் கொள்ளாத நிலையில், இருக்கும் ப்ரீத்திக்கு

திடீரென்று கவினுக்கு முத்தக் கொடுத்து விடுகிறார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது, என்பதை அறிந்துக் கொள்ளும் கவின், அவரை

நிராகரித்து விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது ? , இருவரும்

ஒன்று சேர்ந்தார்களா ?, இல்லையா? எனபதை கவினின்

இந்த விசித்திர ஆற்றலின் பின்னணி என்ன ? என்பதை கலர்புல்லான

காதலுடன் சொல்வது தான் இந்த “கிஸ்” திரைப்பட
கதைக்களம்.

காதலை வெறுப்பவராகவும், காதலர்களுக்கு எதிராக செயல்படுபவராகவும் இருந்து பிறகு அதே

காதலுக்காக உருகும் காட்சிகளில் கவின் நல்லவே நடித்துள்ளார்.

காதலர்களை பிரிக்கும் போதும் சரி, காதலுக்காக ஏங்கும் போதும் சரி, பலவித

எக்ஸ்பிரசன்களை சேர்த்து நடிப்பில் வித்தியாசத்தை காட்சி

படுத்திருக்கிறார்.
அதுல வெற்றியும் பெற்றிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, இளமை ததும்ப ததும்ப வலம் வருகிறார். நடிக்க

கூடிய வாய்ப்புள்ள கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்து பார்வையாளர்களின்

கவனத்தை தன் பக்கம் திருப்புவதில் முக்கியதை வென்றிருக்கிறார்.

நாயகனின் நண்பராக

நடித்திருக்கும் ஆர்ஜே விஜய் மற்றும் அவரது தந்தையாக

நடித்துள்ள விடிவி கணேஷ், காமெடி ஏரியாவை தங்கள்

வசம் வைத்துக்கொண்டு பார்வையாளர்களை குலுங்க குலுங்க

சிரிக்க வைத்துள்ளார். சில இடங்களில் இவர்களது டைமிங் காமெடி எடுபடவில்லை

என்றாலும், இரண்டாம் பாதி படத்தை தாங்கிப் பிடிப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராவ் ரமேஷ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக

நடித்துள்ளார். நாயகனின் அம்மாவாக

நடித்துள்ள தேவயானிக்கு,வேடம் பொருந்தவில்லை

உடை மற்றும் லுக்கில் அவருக்கு அமையவில்லை அவர் வந்து போகிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளபிரபு, கெளசல்யா ஆகியோரின் திரை

இருப்பு திரைக்கதைக்கு பெரிய பலம் சேர்த்திருக்கின்றன.

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு காட்சிகளை

கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்கதாபாத்திரங்களில் இருக்கும் இளமையை

காட்சிகளிலும் பிரதிபலிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார

ஜென் மார்டின் இசையில் பாடல்களும்,

பின்னணி இசையும் தனி கவனம் பெறவில்லை என்பதில்.

திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு பாதகம் இல்லாமல் பயணித்திருக்
கின்றன.

படத்தொகுப்பாளர் ஆர்.சி.பிரனாவ், வித்தியாசமான

கதைக்களத்தை எப்படி கையாள்வது என்று தெரியாமல் முதல் பாதியில்

திணறல், இரண்டாம் பாதியில் பார்வையாளர்
களுக்கு பிடித்ததை

சரியான முறையில் தொகுத்து படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்.

இயக்குநராக அறிமுகமாகி
யிருக்கும் நடன இயக்குநர் சதீஷ்

கிருஷ்ணன், இளைஞர்களுக்கான படமாக கொடுக்கும் முயற்சியில்,

முத்தத்தை வைத்து பெரும் காதல் யுத்தம் நடத்தியிருக்கிறார்.

காதல் பிடிக்கா நாயகன் காதலர்களை பிரிக்கும் வேலையை செய்வது சில படங்களில்

ஏற்கனவே வந்திருக்கிறது முதல்பாதி படம் சற்று மெதுவாக நகர்கிறது,

நாயகனுக்கு காதல் பிறந்துவிட்ட போது ஏற்படும் மாற்றமும்,

அதன் மூலம் நிகழும் சம்பவங்களை காமெடியுடன் சேர்த்து சொல்லும் போது

வரும் சிரிப்பால் சோர்வு விலகி படத்தை ரசிக்க முடிகிறது.

படம் பார்த்தத்தில், ‘கிஸ்’ காதல் யுத்தத்தால் வரும் சிரிப்பு

சத்தம்.கேட்டால் அதுவாக அமைதியுடன் முத்தமா .மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *