கிங்டம் ” திரை விமர்சனம்..

Share the post

“கிங்டம் ” திரை விமர்சனம்…

நடத்தவர்கள்:- தேவரகொண்டா,
சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ்‌ வெங்கடேஷ், ஐயப்பா பி.சரமா,மனிஷ்
சவுத்ரி,
பாபுராஜ் , மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-கெளதம் தின்னனுரி.

மியூசிக்:-அனிருத் ரவிச்சந்திரன்.

ஒளிப்பதிவு :- கிரிஸ்கங்காதரன்
ஹோமர் டி.ஜான்.

படத்தொகுப்பு:-
நவீன்நூலி.

தயாரிப்பாளர்கள்:-
சித்தாரா என்டர்டெயின்மென்ட்
போர்டுன் போர் கிரியேஷன்ஸ்.கிரா
ஸ்டுடியோஸ் கெளதம் தின்னனுரி.

1920-ல் ஆண்டுகளில் ஒரு ட்ரைப்பில் இருந்த‌‌ குழுவை

வெள்ளையர்கள் தங்கத்திற்காக
அழித்திருக்கின்றனர்.

அங்கிருந்து சில பெண்கள், குழந்தைகள் மட்டும் அரசன் உத்தரவால்

ஸ்ரீலங்காவில் ஒரு தீவில் தஞ்சம் அடைகின்றனர்.

அதன் பிறகு சொந்த நாட்டிற்கு வர முடியாமல் தத்தளிக்கும் மக்களை மீண்டும்

அரசன் காப்பாற்றுவான் என காத்திருக்கின்றனர்.

1991- ல் விஜய் தேவரகொண்டா போலீஸ் கான்ஸிடபுள் வேலை பார்க்கிறார்,

அந்த நேரத்தில் சின்ன வயசுல அம்மாவை
குடித்து விட்டு வந்து அடிக்கடி அடிக்கும் அப்பாவை விஜய் தேவரகொண்டா

அண்ணன் கொன்றுவிட்டு தப்பித்து ஒடிவிடுகிறார்.

தனது அண்ணனை சின்ன வயதிலிருந்து தேடி வரும் விஜய் தேவரகொண்டா தனது

அண்ணனை பிடிக்கும் ஒரு அண்டர் கவர் ஆப்ரேஷன் கிடைக்கின்றன.

ஏனென்றால் விஜய் தேவரகொண்டா அண்ணனும்

ஸ்ரீலங்காவில் ஒரு பெரும் மாஃபியா தலைவனாக வாழ்ந்து‌ வந்துள்ளார்.

இதனால் ஒரு கைதி போல் ஸ்ரீலங்காவில் சென்று விஜய் தேவரகொண்டா, தனது

அண்ணனுக்கு ஏதுவும் ஆகாமல் அங்கிருந்து காப்பாற்றினாரா,

அல்லது அந்த தீவு மக்களுக்காக அரசன் ஆனாரா? இல்லையா? என்பதை மீதிக் கதைக்களம்.

படத்தை பார்த்தத்தில்
விஜய் தேவரகொண்டா (சூரி) கதாபாத்திரத்தில
வாழ்ந்த்திருக்கிறார்.

தனது அண்ணனை தேடி ஒரு உளவாளி போல அவர் கூட்டத்திற்குள்

சென்று, அவர் அண்ணனுக்கு தெரியாமல்

விஷயத்தை தெரிந்துக்கொள்ள போராடும் தருணம், அதே நேரத்தில்

ஸ்பை என்று தெரிய‌ கூடாது. என்று அதற்காக அவர் தாங்கின்ற வலிகள் என

மனுஷன் வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாக காரியர்ல

பெஸ்ட் பெர்ப்பாமன்ஸ் என்று இந்த கிங்டம் படம் என்று சொல்லலாம்.

சத்யதேவ் விஜய் தேவரகொண்டா அண்ணனாக வருகிறார், அவரும்

தனது பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

அதுலும் தன் தம்பி ஒருவருக்காக தனது ஊரை கூட அவர்

கொடுக்க நினைக்கும் பலி எல்லாம்

எமோஷ்னலான கடைசி கட்டமாக அமைந்துள்ளது.
படத்தின் முதல் பாதியை ஏதோ ஒரு ஸ்பையின் கதை

என்பதால் விறுவிறுப்பாக திரைக்கதையில்

ரொம்ப ஸ்லோவாகவே திரைக்கதை நகர்கின்றன. அதை
தொடர்ந்து.

இடைவேளையில் தங்கம் கடத்தும் சீன்ல கொஞ்சம் பற்ற வைத்து கடைசியில்

வெடிக்கும் பாம் போல் இடைவேளை காட்சி அமைந்திருக்கிறது.

இரண்டாம் பாதி அத்தகைய விறுவிறுப்பாக பதில் சொன்னதால்,

மீண்டும் எமோஷ்னலான வழியில் தான் கதையை

இயக்குனர் கௌதம் தேர்ந்தெடுத்திருக்
கிறார்.

அதுல ஒரு சில இடங்களிலும் கொஞ்சம்

பொறுமையை சோதிக்கின்றன. மீண்டும் அண்ணன்-தம்பி பாசம்

போலியான நயவஞ்சக புத்தியோடு அதுல இவர்களை எங்கு கொண்டு

செல்கின்றன. என்பதை

எமோஷ்னலாகவே கொண்டு நகர்த்தி சென்றுருள்ளனர்.

அதுல தனது தம்பி ஸ்பை என தெரிய கூடாது என்றும்

மீதமிருக்கும் தன் மக்களுக்காக
சத்யதேவ் வின் போராடுமிடத்தில்

மிகுந்த வலியுடன் பதிவு செய்துள்ளனர். ஹீரோயின் எல்லாம் எதற்கு படத்தில்,

எதோ வைக்கவேண்டும் என்பதற்காக வைத்தது போல் வந்து செல்கிறார்.

பாக்யஸ்ரீ, வில்லன் கதாபாத்திரம் முருகன் கவனம் ஈர்க்கிறார்.படத்தில்

எத்தனையோ காட்சியில் கடைசியில் கொண்டு வரும்

காட்சிகள் இருந்தும், மிகபொறுமை
யாகவே

கதையை நகர்த்தி செல்வது ஒரு கட்டத்திற்கு மேல்

கமர்சியல் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம்பொறுமையை சோதிக்கிறது நிகழ்வு.

அதே நேரத்தில் அனிருத் அப்படி தொய்வாகும் காட்சிகளில்

இறங்கி தனது பங்கிற்கு பின்னணி

இசையால் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்.

டெக்னிக்கலாக படம் மிக வலுவாக உள்ளது, படத்தின்

ஒளிப்பதிவில் இலங்கையை அழகாக படம்பிடித்த விதம்

அத்தனையும் யதார்த்தம், அதற்கு ஏற்றது போல்

அனிருத் பின்னணி இசை அமைந்த்திருப்பது படத்தை ஒரு படி மேலே பலமாக கொண்டு செல்கிறது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்தக்கட்டம் அவருக்கு பலம்

ஒளிப்பதிவு, இசையின் டெக்னிக்கல்

விஷயங்களில். திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் அடுத்து நாம் பார்த்த காட்சிகள் இதுல வந்து நகர்ந்து செல்கிறது.

படம பார்த்தத்தில் கிங்டம் கொஞ்சம் விட்டு கொடுத்து

இருந்தால் இலங்கை மக்கள கண்டு விஜய் தேவரகொண்டா

மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள் இந்த படம் மொத்தமாக தாங்கி பிடித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *