நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

கார்த்தி 27 வது படமான இப்படத்திற்கு “மெய்யழகன்“ என்று வைத்துள்ளார்கள்.
கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்னொரு மிகமுக்கியமான கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷ்னி, ஜெயபிரகாஷ், ஶ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி,
ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து சூப்பர்ஹிட்டான #96 படத்தை டைரக்ட் செய்த
ச. பிரேம் குமார் டைரக்ட் செய்கிறார். அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
96 படம் மூலம் மெகா ஹிட்டான பாடல்களை தந்த இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா மீண்டும் டைரக்டர் ச. பிரேம்குமாருடன் இப்படம் மூலம் கைகோர்க்கிறார்.
இதன் படபிடிப்பு கும்பகோணம், சிவகங்கை பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று முடிவடைந்தது.
எடிட்டிங், டப்பிங் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கூறுகையில், “கார்த்தி மற்றும் அரவிந்த் ஸ்வாமி தங்களது சிறந்த நடிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இறுதி வடிவத்தை கண்ட இயக்குநர் பிரேம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நமது சொந்தங்களின் முக்கியத்துவத்தையும், பண்பாட்டு வேர்களையும் வலியுறுத்தக்கூடிய ஒரு நல்ல குடும்பப் படமாக இது இருக்கும்.” என்று கூறினார்.
தயாரிப்பு: ஜோதிகா மற்றும் சூர்யா
இணை தயாரிப்பு: ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன்
ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜு,
எடிட்டிங்: ஆர்.கோவிந்தராஜ்,
புரொடக்ஷன் டிசைனர்: ராஜீவன்,
பாடல்கள்: கார்த்திக் நேத்தா – உமாதேவி,
மேக்கப்: வி.முருகன்,
VX: எஸ்.அழகிய கூத்தன்- சுரேன்.ஜி,
VFX: பாந்தம் ஸ்டுடியோஸ்,
DI: ஐஜின்,
கலரிஸ்ட்: ராஜசேகரன்.K.S,
Sync Sound: ராகவ் ரமேஷ்,
ஸ்டில்ஸ்: ஆகாஷ்,
Pro: ஜான்சன்.