கபில் ரீட்டர்ன்ஸ் திரை விமர்சனம்!!

Share the post

*கபில் ரீட்டர்ன்ஸ் திரை விமர்சனம்!!*

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி வெளி வந்திருக்கும் படம் கபில் ரீட்டர்ன்ஸ்.

இப்படத்தில் ஸ்ரீனி சௌந்தரராஜன், நிமிஷா, ரியாஸ் கான், வையாபுரி, சரவணன், மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், பேபி சர்ஷா மற்றும் பலர் நடத்துகிறார்கள்

இசை ,பிரதாப் ராஜ்

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீனி செளந்தரராஜனுக்கு கிரிக்கெட் விளையாட்டு என்றாலே பிடிக்காது. தனது தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினால் கூட அவர்களை விரட்டியடிப்பார். அப்படிப்பட்டவரின் மகனுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால், அதற்கு ஸ்ரீனி செளந்தரராஜன் மறுப்பு தெரிவிப்பதோடு, கிரிக்கெட் விளையாட்டை தவிர மற்ற விளையாட்டில் ஈடுபடுமாறு சொல்கிறார். கிரிக்கெட் விளையாட்டை ஸ்ரீனி செளந்தரராஜன் வெறுப்பதற்கு காரணம் என்ன? என்பதை கண்டறியும் அவரது மனைவி, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண, அதன் பிறகே அவர் தனது மகனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறார்.

இதற்கிடையே. தேசிய கிரிக்கெட் அகடாமி சார்பில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. அந்த தேர்வில் கலந்துக்கொள்ளும் ஸ்ரீனி செளந்தரராஜனின் மகன் தவறாக பந்து வீசியதாக நிராகரிக்கப்படுகிறார். ஆனால், ஆடுகளத்தில் இருக்கும் குறைபாட்டினால் தான், வீரர்கள் பந்து வீசுவது தவறாகிறது, என்பதை அறியும் ஸ்ரீனி செளந்தரராஜன் தேர்வுக் குழுவினரிடம் உண்மையை சொல்லி விளக்குவதோடு, தனது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்குமாறு கேட்கிறார். ஆனால், அவருடைய வாதத்தை தவறாக புரிந்துக்கொள்ளும் தேர்வுக் குழுவின் ஒருவரான ரியாஸ் கான், அவரது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க ஸ்ரீனிக்கு ஒரு போட்டி வைக்கிறார். கிரிக்கெட்டையே வெறுப்பவர் எப்படி இந்த சவாலை சமாளிக்கப் போகிறார், என்று ஸ்ரீனியின் மகன் உள்ளிட்ட ஒட்டு மொத்த கூட்டமே அதிர்ந்து போக, அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உரையும் அளவுக்கு ஸ்ரீனி செளந்தரராஜன் அந்த சவாலில் வெற்றி பெறுகிறார். அவருடைய இந்த அபாராமான திறமையை பார்த்து வியக்கும் தேர்வுக்குழு எடுக்கும் முடிவால், இதுவரை கிரிக்கெட் உலகில் நடக்காது ஒரு அதிசயம் நடக்கிறது. அது என்ன?, கிரிக்கெட்டை ஸ்ரீனி செளந்தரராஜன் வெறுத்தது ஏன்?, கிரிக்கெட்டை வெறுத்தவர் இப்படி உலக சாதனை நிகழ்த்தும் அளவுக்கு பந்து செயல்பட்டது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘கபில் ரிட்டன்ஸ்’ படத்தின் இப்படத்தின் கதை.

ஸ்ரீனி சௌந்தரராஜன், நிமிஷா, ரியாஸ் கான், வையாபுரி, சரவணன், மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், பேபி சர்ஷா இப்படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் ஏற்ற நடித்தி இருக்கிறார்கள்

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீனி செளந்தரராஜன், முதல் படம் போல் அல்லாமல் தயக்கம் இன்றி நடித்திருக்கிறார். சிறு வயதில் நடந்த சம்பவத்தை எண்ணி கலக்கம் அடைவது, ஆட்டோ ஓட்டுநரிடம் நட்பு பாராட்டுவது, மகனுக்கு ஒரு பிரச்சனை என்றதுமே அமைதியாக இருந்தவர் அதிரடி அவதாரம் எடுப்பது, மற்றவர்கள் கேலி செய்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து போவது, என்று அனைத்து இடங்களிலும் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் பல நல்ல விசயங்களை சொல்லி பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு, அவர்களுக்கு ஊக்கமும், தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையில் நடித்திருக்கிறார்
ஸ்ரீனி செளந்தரராஜனின் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷா, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தனது கணவன் தடுமாறும் இடங்களில் அவரது பிரச்சனையை அறிந்து, அதில் இருந்து அவரை மீட்டெடுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டும்படி இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் இருக்கிறது.

சிறு வயது ஸ்ரீனி செளந்தரராஜன் வேடத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் பரத் மற்றும் ஸ்ரீனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஜான் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். தாத்தா, அப்பா மற்றும் அம்மா என்று ஆளுக்கு ஒரு ஆசையை தன் மீது திணித்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விளையாட்டாக பயணிக்கும் ஜான் இயல்பாக நடித்திருக்கிறார்.

மொத்தத்தில்

*கபில் ரிட்டன்ஸ்’ முயற்சி எப்போதும்தோற்காது அழுத்தமாக கூறு இருக்கிறது .
*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *