தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி பெருவிழா. ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திருநாளில் முருகப்பெருமான், அசுரர்களான சூரனையும் பதுமனையும் ஆட்கொண்டு, அவர்களை சேவல் மற்றும் மயில் வாகனங்களாக ஏற்றுக்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்நிகழ்வை நினைவுகூரும் விதத்தில் ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா நடந்துவருகிறது. இந்நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம்.
இத்தகைய சிறப்புவாய்ந்த சூரசம்ஹார திருவிழாவை வரும் ஞாயிற்றுக்கிழமை (அக் 30) மாலை 4.30 மணிமுதல் ஜெயா டிவி நேரலையாக ஒளிபரப்பவுள்ளது.