
காமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை திரைப் படங்களை இயக்கி, தயாரித்த நாஞ்சில் பி.சி.அன்பழகன் இப்போது, எழில்
இயக்கத்தில், விமல் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்!
ஏற்கனவே அரசியல்வாதியாகவும் அறியப்பட்ட அன்பழகன், இந்தப் படத்தில் அமைச்சராக, தென் மாவட்ட பேச்சுமொழியில் பேசி, அசத்தியிருக்கிறாராம்.

அவரது இயல்பான வெள்ளை காஸ்டியூமையும் மாற்றம் செய்யாமல் இயல்பாக பதிவு செய்திருக்கிறாராம் இயக்குனர் எழில்.
எழிலுக்கு ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அன்பழகனுக்கு ‘காமராசு’ இவர்கள் இருவரும் சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்திரியின் வார்ப்புகள்!
@GovindarajPro