’கலன்’ திரைப்பட விமர்சனம்

Share the post

’கலன்’ திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் : – தீபா சங்கர், அப்புக்குட்டி, சம்பத்ராம், காய்த்ரி, யாசர், சேரன்ராஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :- வீரா முருகன்.

மியூசிக் : – ஜெர்சன்.

ஒளிப்பதிவு:-ஜெயக்குமார்.

கலை இயக்குனர்:- திலக் ராஜன் அபேத்.

தயாரிப்பாளர்கள்:- ராஜலட்சுமி.
புரொடக்ஷன்ஸ் – ராஜேஸ்வரி.சந்திர
சேகரன்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, (தீபா)

அவர்‌ கணவனை இழந்தாலும் கஷ்ட்டப்பட்டு தனது

ஒரே மகனான வேங்கையை படிக்க வைத்து ஆளாக்குகிறார்.

அவருக்கு அவரது தம்பி (அப்புக்குட்டி )துணையாக நிற்கிறார். வேங்கையின்

நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை

வருகிறது. அவர்களிடம் இருந்து நண்பனின் தங்கையை

காப்பாற்றும் வேங்கை, அவர்களது போதைப் பொருள்

சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடிவு செய்கிறார். இதனால்

வேங்கை உயிருடன் இருந்தால் எந்த வேலையையும் நடக்காது

தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கல் வந்து விடும்

என்பதால், அவரது நண்பன் மூலமாகவே

அவரை கஞ்சா கூட்டம் (யாசரை) கொலை செய்துவிடுகிறார்கள்.

இந்த அநியாயத்தை‌ தட்டிக்கேட்டு எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது

மகன் வேங்கையின் மரணத்திற்கு பழி தீர்ப்பதோடு, கஞ்சா

போதைப் பொருளால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை

பாலியல் வன்கொடுமை செய்யும் கூட்டத்தை

வேறோடு அழிக்க அதற்கு‌‌ முடிவு‌ செய்கிறார்கள்.

வேங்கையின் தாய் வெட்டுடையார்

காளியும், அவரது தம்பி அப்புக்குட்டியும் களத்தில்

இறங்கினார்கள், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை

அதிரடியாகவும், சமூகத்திற்கு

அவசியமானதாகவும் சொல்வதே ‘கலன்’ படத்தின் கதைக்களம்.

வெட்டுடையார் காளி என்ற கதாபாத்திரத்தில் பாசமிகு தாயாக

நடித்திருக்கும் தீபா, தனது மகனின் மரணத்திற்குப் பிறகு எடுக்கும் அவதாரத்தில்

காளியாக மாறி மிரட்டியிருப்பதோடு, பெண்களுக்கு எதிரான

குற்றங்களில் ஈடுபடும் கூட்டத்திற்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

உழைப்பாளியாக, பாசம் மிக்க தம்பியாக நடித்திருக்கும்

அப்புக்குட்டி தனது எதார்த்தமான நடிப்பால் திரைக்கதைக்கு பலம்

சேர்த்திருப்பதோடு, எமோஷனலான‌

நடிப்பில் ஆவேசமாக எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில்

கொலை வெறி தெறிக்க விட்டு‌ நடித்திருக்கிறார். நடிகை ‌தீபா.

வில்லனாக நடித்திருக்கும் (சம்பத் ராமின்) காத்திருந்தால் மிகப்பெரிய வாய்ப்பு

கிடைத்திருக்கிறது. அதை மிகச்சரியாக

பயன்படுத்திக் கொண்டியிருக்கிறார்

தனது வில்லத்தனம் மூலமாக

அவரது ரசிகர்களின் கடும்கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

கஞ்சா வியாபாரியாக போதை மிதக்கும் கண்கள், கையில்

சுருட்டு என்று மிரட்டலான

கதாபாத்திரத்தில்,‌
மிரட்டல் திமிரான

நடிப்பின் மூலம் நல்ல நடிகையாக
தலை‌‌ நிமிர்ந்து நிற்கிறார்

காயத்ரி. கிராமத்து அம்மா, நகரத்துப் பெண், மருத்துவர் என

பல வேடங்களில் கச்சிதமாக பொருந்தும் வகையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி, வில்லியாகவும்

தனது தனித்துவமான நடிப்பு மூலம் கவனம் பெற்றுள்ளார்‌.

வேங்கை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர்,

தென் மாவட்ட இளைஞர்களை

பிரதிபலிக்கும் வகையில் சிறப்பான நடிப்பில் ஆவேசமாக நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சேரன்

ராஜ், வேங்கையின் நண்பராக நடித்திருக்கும் நடிகர் உள்ளிட்ட மற்ற

வேடங்களில் நடித்திருக்கும் அனைவர்களும்

கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வகையில் நடித்துள்ளார்.

தென் மாவட்ட மக்களை போல பிரதிபலிக்கும் வகையில் செய்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் ஜெர்சன் இசையில் பாடல்கள் அனைத்தும்

திரும்ப திரும்ப கேட்கும் வகையில் ரகங்கள். குறிப்பாக “வெட்டுடையார் காளி..” பாடலும், அதை

படமாக்கிய விதமும் திரையரங்கில் பெரும்
அதிர்வலையை ஏற்படுத்து‌கிறது. குருமூர்த்தி மற்றும்

குமரி விஜயன் ஆகியோர் பாடல் வரிகள்,

கதாபாத்திரங்களின் உணர்வுகளை‌ ஏற்பே விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் ஜெயக்குமார் மற்றும்

ஜேகே தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை இயல்பாகவும், காட்சிகள் அமைந்துள்ளது

பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்
கிறார்கள். இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருந்தாலும் அதை

உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்திய விதம்,

அந்த திருவிழா காட்சிகள் ஆகியவை படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தி‌‌ காட்சியமைப்புகள்.

விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் ஆகியோர்

படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி சென்றுள்ளது, இயக்குநர் சொல்ல

முயற்சித்திருக்கும் கருத்துகளை

சிறிதும்‌‌ சிதைக்காமல் பார்பவர்களை நகர்த்திச் சென்றுயிருகிறார்கள்.

கலை இயக்குநர் திலகராஜன் அம்பேத், நடன இயக்குநர் வெரைட்டி பாலா

ஆகியோர் பணி கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் வீரமுருகன், தற்போது சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை

கருவாக கொண்டு மிகப்பெரிய விழுப்புணர்வோடு படத்தை கொடுத்துள்ளார். குறிப்பாக போதைப்

பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து வரும் அவல நிலை மற்றும் அதனால் பாதிக்கப்படும்

பெண்களின் அலறல்களை அழுத்தமாக பதிவு செய்திருப்பவர், குற்றவாளிகளுக்கு

எத்தகைய கடுமையான தண்டனை கொடுக்க

வேண்டும் என்பதையும் அதிரடியாக பதிவு செய்திருக்கிறார்.இயக்குனர்

சில இடங்களில் சாதி ரீதியான குறியீடுகள் பல இருந்தாலும், அனைத்தையும்

லாஜிக்கோடு திரைக்கதையில் பயணிக்க வைத்திருக்கும்

இயக்குநர் வீரமுருகன், ஆன்மீகம் மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம்

என்பதை திரை மொழியில் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில்

ஈடுபடுபவர்களைகளை திருந்துவகையில் எடுக்கும் காட்சிகள்

அதிகம் இரத்தம் தெறிக்கும் வகையில் இருந்தாலும், பாதிக்கபப்ட்டவர்களின்

இடத்தில் இருந்து பார்க்கும் போது அந்த

காட்சிகள் சரியானதாகவே இருக்கிறது.

சமூகத்திற்கான ஒரு படமாக இருந்தாலும், அதை கமர்ஷியலாகவும் அதே சமயம்

நாகரீகமான முறையில் இயக்கியிருக்கும் இயக்குநர் வீரமுருகன்,

வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி அனைவருக்குமான ஒரு

பாடமாக கொடுத்திருக்கும் ‘கலன்’ மக்களை நல்வழியில் பயணிக்க வைக்கும்.

, ‘கலன்’ திரைப்படம் சமூகத்திற்கான‌

அக்கரை தரும்‌ படமாக அமைந்ததுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *