கலைஞர் டிவியில் தமிழ் அறிவை ஊட்டும் “தமிழோடு விளையாடு சீசன் 2”




கலைஞர் தொலைக்காட்சியில் “தமிழோடு விளையாடு” முதல் சீசனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளுடன் வித்தியாசமாகவும், பிரம்மாண்டாகவும் உருவாகி இருக்கிறது.

ஆங்கிலப் புத்தாண்டுக்கான சிறப்பு பகுதி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிலையில், இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனராகவும், முன்னணி குணச்சித்திர நடிகராகவும் வலம் வரும் நடிகர் தம்பி ராமையா பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.