ருத்ரா – பூமிநாதனை சேர்த்து வைக்க முயற்சிக்கும் சக்தி..!
சக்தியை பழிவாங்க துடிக்கும் அனிதா..!

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.

சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்ற ருத்ரா வெளியே வர, பூமிநாதன், ருத்ரா பற்றிய உண்மைகள் சக்திக்கு தெரிய வருகிறது. இதையடுத்து இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க சக்தி முயற்சி செய்ய, இந்த விஷயம் ருத்ராவுக்கு தெரிய வர சக்தியின் நிலைமை என்னவாகும்? என்கிற எதிர்பார்ப்போடும்.

ருத்ரா தனது கம்பெனியில் அனிதாவுக்கு பொறுப்பு கொடுக்க, அனிதா அதை தவறாக பயன்படுத்தி தோல்வியடைய, சக்தி உள்ளே புகுந்து வேறுவிதமாக வெற்றியடைய செய்ய, இதனால் கடுப்பாகும் அனிதா, சக்தியை பழிவாங்க துடிக்க அடுத்து என்னவாகும்? என்கிற எதிர்பார்ப்போடும் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.



இந்த நெடுந்தொடரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.