“கஃபுல் பிரண்ட்லி”திரைப்பட விமர்சனம்

Share the post

“கஃபுல் பிரண்ட்லி”திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:- சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்

டைரக்டர் : – அஸ்வின் சந்திரசேகர்.

மியூசிக் : –
ஆதித்ய ரவீந்திரன்.

ஒளிப்பதிவு:-
தினேஷ் புருஷோத்தமன்.

படத்தொகுப்பு:-
கணேஷ் சிவா.

தயாரிப்பாளர்கள்:- யு.வி. கிரியேஷன்ஸ் – அஜய் குமார் ராஜு

நமது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு உட்புற வடிமைப்பு அலங்காரம் மேற்கொள்ளும்

துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு

சென்னைக்கு வரும் கதாநாயகன் சந்தோஷ் சோபன்,

அத்துறையில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறுகிறார்.

வறுமையை சமாளிக்க பகுதி நேரமாக இருசக்கர டாக்ஸி ஓட்டுகிறார்.

கதாநாயகி மானசா வாரணாசி ஐடி துறையில் பணியாற்றி

முன்னேறும் கனவோடு, சென்னையில் வேலை தேடி

அலைகிறார். இந்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தித்துக்

கொள்வதுடன், ஒரு இக்கட்டான சூழ்நிலையால் ஒரே வீட்டில் தங்கி ஒன்றாக பயணிக்கிறார்கள்.

கதாநாயகியின் வரவால் நாயகனின் கனவு நினைவாகின்றன அவர் நினைத்தபடி அவரது துறையில்

வெற்றியை நோக்கி பயணிக்க, கதாநாயகியும் தான் நினைத்தது போல் ஐடி துறையில் பணியாற்றும்

வாய்ப்பை பெறுகிறார். இப்படி இருவரும் தங்களது கனவு வாழ்க்கை

நிஜமான மகிழ்ச்சியோடும், காதலோடும் பயணிக்கும் போது,

இவர்களது பாதையில் திடீர் தடை ஏற்படுகிறது. அந்த தடை என்ன ?,

அதனால் பாதிக்கப்பட்ட இவர்களது மகிழ்ச்சி பயணம் மீண்டும் தொடர்ந்ததா ?

என்பதை இல்லையா ?அற்புதமான காதல் உணர்வோடு சொல்வது தான “கஃபுல் பிரண்ட்லி”
திரைக்களம்

துவக்கம் முதல் முடிவு வரை மிக இயல்பாக பயணித்து பார்வையாளர்கள் திரையுடன்

கட்டிப்போட்டு மிக சிறப்பான காதல் உணர்வையும், நம்பிக்கையையும் கொடுக்கும் இந்த படம்

பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காதல்

படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும்.என்பது நிச்சயம்.

கதாநாயகனாக நடித்திருக்கிறார் சந்தோஷ் சோபன், தமிழுக்கு புதிய முகம் என்றாலும், தன் நடிப்பு மூலம்

அந்த அடையாளத்தை மறைத்து பார்வையாளர்கள்

மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார். வறுமையின் பிடியில்

சிக்கித் தவிக்கும் போதும் சரி, தன் துணையின் உதவியின் மூலம்

தனது துறையில் சாதிக்கும் போதும் சரி, அவரது இயல்பான நடிப்பு அவரது

கதாபாத்திரத்திற்கு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கின்றன.

நாயகியாக நடித்திருக்கிறார் மானசா வாரணாசி, தன் நடிப்பின் மூலம் வியக்க வைக்கிறார், என்று சொன்னால் அது மிகையாகாது.

முதல் பாதி முழுவதும் தன் அழகாலும், நடிப்பாலும் ரசிக்க வைப்பவர்,

இரண்டாம் பாதியில் இதயம் கனத்து, கண் கலங்க வைத்து விடுகிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரது வழக்கமான டைமிங் வசனங்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க

வைக்கிறது. சுனில் ரெட்டி உள்ளிட்ட பிற நடிகர், நடிகையர்கள் கதாபாத்திரங்
களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்துள்ளார்கள்

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன் எதார்த்தம் மீறாத காட்சிகளின் மூலம் கவனம் ஈர்ப்பதோடு, நாயகன், நாயகி

இருவரது காதல் மற்றும் கூடல் காட்சிகளை

ரசனையுடன் படமாகி அசத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்தின்

ஆன்மாவாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் சிறப்பு.

கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு படத்திற்கு பெரும் பலம். கலை

இயக்குநர் மைக்கேலின் கைவண்ணமும் கவனம் ஈர்க்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் சந்திரசேகர், காதல் உணர்வுகளை

மனதுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருப்

பதோடு, உடன் இருக்கும் துணைக்கு தோள் கொடுத்து ஊக்கப்படுத்துவது,

காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதியாக இருந்தாலும் சரி,

அவர்களது மிகப்பெரிய கடமை என்பதை நினைவூட்டியிருக்
கிறார்.

காதல் கதை என்றாலும், அதனுடன் முன்னேற துடிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும்

போராட்டங்கள் பற்றி பேசும் படம், அவற்றை எல்லாம் கடந்து தொடர்ந்து போராடினால்

வெற்றி நிச்சயம், என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.

காலத்திற்கு ஏற்ப காதலும் மாறி விட்டதா ? என்று பட்டிமன்றம் பேசுபவர்கள் மத்தியில், உண்மை

காதல் என்றுமே மாறாது, என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் விதத்தில்

படத்தின் முடிவை வைத்திருக்கும் இயக்குநர் அஸ்வின்

சந்திரசேகர், அதை அனைத்து தரப்பினரும்

ஏற்றுக்கொண்டு படத்தை கொண்டாட வைத்திருக்கிறார்.

படம் பார்த்தத்தில், ‘கஃபுல் பிரண்ட்லி’ நிறைவான மனதில் இருக்கும் காதல் திரைப்படம்

அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *