ஜெ.துரை
பத்திரிக்கையளரிடம் கோபமாக பேசிய கே.ராஜன்
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் லேபில் ‘நாயாட்டி’ என்னும் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆதர்ஷ் மதிகாந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:
தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லை நான் பத்து வருடமாக ஆஸ்திரேலியாவில் உழைத்து சேர்த்து வைத்த பணத்தை வைத்து தமிழ் படம் ஒன்று தயாரித்து தமிழ்நாட்டில் திரையிட எனக்கு தியேட்டர் கிடைக்கவில்லை கேரளாவில் 150 தியேட்டர் தருகிறேன் என்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் புதுமுக தயாரிப்பாளர் புது முக நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு இங்கு முன்னுரிமை இல்லை என்று மிகவும் மன வேதனையோடு கூறினார் இதனை தொடர்ந்து பேசிய திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் பாகுபலி பட நாயகனாக நடித்த பிரபாஸ் நடிக்கும் புதிய திரைப்படம் வெளிவர இருப்பதால் சிறிய படங்களை திரையிட தியேட்டர் தர மறுக்கிறார்கள் இரண்டு வாரம் பொறுமையாக இருங்கள் அதன் அதன் பிறகு உங்கள் படத்தை திரையிடலாம் என்று முடித்துக் கொண்டு ஓ.டி.டி தான் தமிழ் சினிமாவை அளிக்கிறது பேசினார் அப்போது கூட்டத்தில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் ஒ.டி.டி விஷயத்தை அப்புறம் பேசுங்கள் இப்போ இந்த படத்தை மட்டும் பேசுங்கள் இதை திரையிட உதவி செய்யுங்கள் இதைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்று கேள்வி எழுப்பினார் ‘நான் முடிக்க போகிறேன் என்னை திரும்பவும் ஆரம்பிக்க வைக்காதே’
யாருப்பா நீ என்று ஆவேசமாகவும் கோபமுடன் பேசினார் இதனால் சக பத்திரிக்கையாளர்களிடம் கே.ராஜன் கோபமாக பேசிய செயல் சகா பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியது