
ஜோரா கைய தட்டுங்க” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:- யோகிபாபு , சாந்திராவ் , ஹரிஷ் பெராடி, கல்கி , வசந்தி,மணிமாறன், சாகிர்அலி, அருவி பாலா , ஸ்ரீதர் கோவிந்தராஜ் ,மூர் மேனகா, வரிஜாக்ஷன் ,நைரா நிஹர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்ஷன் :வினீஷ் மில்லினியம் .
மியூசிக் :- எஸ்.என். அருணகிரி – ஜித்தின். கே.ரோஷன் ,
மது அம்பாட்டின்
தயார்ப்பாளர் வாமா ” என்டர் டெய்ன் மென்ட்” -சாகிர் அலி
பிரபலமான மேஜிக் கலைஞரின் மகனான யோகி பாபு, தனது தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராக வருகிறார். ஆனால்,
அவரது மேஜிக்கை பிடிக்காமல் மக்கள் விமர்சித்து கேலிச் செய்கிறாங்க.
இதனால், தனது தந்தையாரை யைப் போல் அவரால் அந்த துறையில் பிரகாசித்து . ஜொலிக்க முடியாமல் போகிறது , மனதில் சோதனைகள் வருகிறது.அவர்களை
எதிர்த்து பேசவேண்டும் சூழ்நிலையில் ஏற்படுகிறது. அதனால்.
சில ரவுடி கும்பல்கள் சேர்ந்து அவரது கையை வெட்டிவிடுகிறார்கள். இழந்து கையால
தனது தொழிலில் மேஜிக் கலையை தொடர்ந்து செய்ய முடியாமல் போகிறது.
இடையில் , யோகி பாபு யின் கையை
வெட்டிய பிறகும் ரவுடி கும்பல்கள் சேர்ந்து, அவரது சொந்தமான சிறுமியை இவர்கள் கெடுத்துக் கொலை செய்து விடுகிறார்கள் .
இதனால் தனது மேஜிக் திறமையை வைத்து ரவுடி கும்பல்களை பழிக்கு பழிவாங்க திட்டமிடுகிறார்
யோகி பாபு. அவர்களை எப்படியும் பழிவாங்க வேண்டுமென்று .
துணிவு வர அதன் மூலம் அவருக்கு எப்படிப்பட்ட பல இடைஞ்சல் வருகிறது,
அதிலிலிருந்து அவர் எப்படி தப்பித்து, வெளிவருகிறார். என்பதை சொல்வதே ‘‘ஜோரா கைய தட்டுங்க’’ கதைக்களம்.
கதையின் கதாநாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு சிறப்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்தாலும் அவரிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும்
நிறைய காமெடி குறைவாக இருக்கிறது.
கதாநாயகியாக நடித்துள்ள சாந்திராவுக்கு நடிப்பில் அவருக்கு பெரிசா வேலை எதுவும் இல்லை . சும்மா வந்து போகிறார்.
போலீஸாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், சாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜகாஷன், நைரா நிஹர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தனக்கு கொடுத்த பங்கை சரியாக குறையில்லாமல் நடிப்பில் சரி செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரியின் பாடல்களும், ஜித்தின் கே.ரோஷனின்
பின்னணி இசையும் சுமாராக இருக்கு .
வினீஷ் மில்லினியம் மற்றும் பிரகாஷ்.கே, பழிவாங்கும் கதையை
காமெடியாகவும், கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பரபரப்பு இல்லாமல் சைலண்டா சொல்லியிருப்பது
படத்தை சற்று ஏமாற்றம் செய்கிறது.
யோகி பாபுவை காமெடியனாக மட்டுமே காட்டாமல் கொஞ்சம் சீரியஸான
கதாபாத்திரத்தில் அவரை பயணிக்க செய்திருக்கிறார். இயக்குநர் வினீஷ் மில்லினியம், திரைக்கதையில் பல
திருப்பங்கள். இருந்தாலும் , ரொம்பவௌம் மெதுவாக நகர்த்து செல்கிறது
படத்திற்கு பெரிய பலவீனமாகிறது.
பல தொடர் கொலைகளை செய்கிறார் .யோகி பாபு, தனது மேஜிக் மூலம் அதிலிலிருந்து
எப்படி தப்பிப்பது போன்றவை ரகசியம் .அதுல ரசிக்கும்படி இருக்கிறது.
‘ஜோரா கைய தட்டுங்க’ கை தட்டும் படத்தை பார்த்ததில் சத்தம் கேட்காதே வெறும் கை ஒசை .