
குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் ‘ஜெ பேபி’ . மகளிர் தினத்தில் வெளியாகிறது.
பா.இரஞ்சித் தயாரிப்பில்
நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி.
பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே
வெளிவந்திருக்கிறது.

‘ஜெ பேபி ‘ படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும்
படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் , சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோருக்குமான படம் என்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.
‘ஜெ பேபி’ படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.
