ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் , உங்கள் மனசில் தேக்கி வைத்துள்ள ,நீண்ட நாட்களாக வெளிய சொல்ல நினைக்கிற விஷயங்களை பகிர்ந்து கொள்கின்ற தளமாக வந்துள்ளது “சொல்லத்தான் நினைக்கிறேன்” என்கிற புதிய நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் ,காதல் ,திருமண வாழ்க்கை,சொந்த பந்தங்கள் ,நட்பு ,அலுவலக அனுபவங்களில் கிடைத்த மகிழ்ச்சி, வலிகள், சோகங்கள் ,ஏமாற்றங்கள் , துரோகங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
மனசுக்குள் பூட்டி வைத்த விஷயங்களை ஒரு தோழமையாக கேட்டு அதிலிருந்து வெளிய வருவதற்கான எளிய வழிகளையும் சொல்லி மனதிற்கு ஆறுதல் தரும் நிகழ்ச்சியாக இருக்கிறது சொல்லத்தான் நினைக்கிறேன். தொகுத்து வழங்குகிறார் சரண்யா.
இந்நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு11:00 மணிக்கு ஜெயா மேக்ஸில் ஒளிபரப்பாகிறது