விரைவில் ஜம்பு மஹரிஷி 2
ஜம்பு மஹரிஷி வெற்றி பட விழாவில் அப்படத்தின் நடிகர் ,தயாரிப்பாளர், இயக்குனர் பாலாஜி பூபாலன்,கேமராமேன் பகவதி பாலா,படவிநியோகஸ்தர் ஜெனிஷ் ஆகியோர் பங்கேற்றனர்.படத்தின் வெற்றி விழாவில் கேக் வெட்டி கொண்டாடினர்.படம் தாங்கள் நினைத்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளதென்றும் படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை 125 ஆக அதிகமாகி உள்ளது என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.பயில்வான் ரங்கநாதன் பற்றி ஓரு நிருபர் கேட்ட போது ஆவேசப்பட்ட இயக்குனர் பெண்களை சாமி மாதிரி வணங்கும் நாடு நம்நாடு. பயில்வான் ரங்கநாதன் பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது தவறான செயல்.இப்படி பேசி பணம் சம்பாதிப்பதை விட அவர் மலத்தை சாப்பிடுவதே மேல் என ஆதங்கப்பட்டார்.பெண்கள் அனைவரையும் நாம் சகோதரிகளாக பார்க்கிறோம் எனவும் கூறினார்.முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதற்கு தக்க நடவடிககை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். பட வெற்றி விழாவில் ஜம்பு மஹரிஷி 2ம் படம் விரைவில் உருவாக உள்ளதாக இயக்குனரும் தயாரிப்பாளருமான பாலாஜி தெரிவித்தார்.








