இனி அலப்பறை தான் – கலைஞர் டிவியில் மீண்டும் ‘செல்லக் குட்டீஸ்’

குடும்பங்களை கவரும் விதமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குழந்தைகள் நிகழ்ச்சி “செல்லக் குட்டீஸ்”. இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் செய்யும் சேட்டையும், அண்ணாச்சி அடிக்கும் லூட்டியும் குடும்பங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



குறிப்பாக குழந்தைகளிடம் சிக்கிக் கொண்டு இமான் அண்ணாச்சி படும் பாடு அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைக்கிறது. இதில், குழந்தைகளிடம் அவர்களது வீட்டில் நடக்கும் ஜாலியான விஷயங்களை கேட்கும் பகுதியும், குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது கதாபாத்திரமாக நடிக்க வைக்கும் பகுதியும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஞாயிறுதோறும் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த நிகழ்ச்சி ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு, தற்போது வருகிற ஆகஸ்ட் 8-ந் தேதி முதல் மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.