
இஷாக் உசைனி நடித்து இயக்கி உள்ள ” பூ க ம் ப ம் “
போலந்து , ஜெர்மன் நாடுகளில்
உருவாகி உள்ளது.
உலகப் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் தற்காப்பு கலைஞரான ஷிகான் உசைனியின் சகோதரரான இஷாக் உஷைனி ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரும் தற்காப்பு கலைஞர் என்பது கூடுதல் சிறப்பாகும்.
தனது ஐ இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி நாயகனாக நடித்து தயாரித்து இயக்கி உள்ள படம்தான் ” பூகம்பம்”. முழுக்க முழுக்க போலந்து மற்றும் ஜெர்மன் நாட்டில் வளர்ந்துள்ள இதில் தில்சானா, ஹேமா, ரிஷத், எம்.எம். இலியாஸ், மல்கோத்ரா, மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
சதாசிவ ஜெயராமன் இசையையும், தயாள் ஓஷோ ஒளிப்பதிவையும், நவீன்குமார் படத்தொகுப்பையும், என்.எம். இலியாஸ் இணை இயக்கம் மற்றும் தயாரிப்பு மேற்வையையும் கவனித்துள்ளனர்.
உள்ளூர் அரசியல் வாதிகளின் தில்லுமுல்லுகளை தோலுரித்து காட்டும் காட்சிகளும், காதலிக்கும் காதலர்களின் மறுபக்கத்தின் நிதர்சன உண்மைகளையும், பொதுவாழ்வில்
ஐ இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ” பூகம்பம்” திரைப்படத்தின் கதை.திரைக்கதை வசனம் எழுதி டைரக்சன் செய்து தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் இஷாக் ஹுசைனி .
ஆக்சன் ஹீரோவாக இஷாக்ஹுசைனி நடித்திருக்கிறார்.போலந்து நாட்டில் தொழிலதிபராக இருந்ததாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மண்ணில் பிறந்தவர்.சில வெற்றி படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது மிக பிரமாண்டமாக அதிக பொருட் செலவில் உருவாகும் “பூகம்பம்”படத்தில் போலி அரசியல்வாதி போர்வையில் உலவுபவர்களை தோலுரித்து காட்டியுள்ளார்.
அரசியல்வாதி மக்கள் மத்தியில் எப்படி இருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள். கல்லூரி மாணவர்கள் நினைத்தால் அரசியலில் உள்ள உச்ச சிம்மாசனத்தை மாற்ற முடியும் என்ற நிலையை உருவாக்க முடியும் என்றும் இதில் கூறி இருக்கிறார்.
படத்தில் வரும் கிளைமேக்ஸ் காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் கமாண்டர் கே.பாபு மற்றும் பொன்னேரி புயல் டாக்டர்.ஜோதி இவர்களுடன் இணைந்து தனக்கு தெரிந்த தற்காப்பு கலையையும் பயன்படுத்தி 20 ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதும் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் வண்ணம் படமாக்கி இருக்கிறார். எதிரிகளால் உருவாக்கப்படும் கலவரத்தை எப்படி அடக்கப் போகிறார் இஷாக்ஹுசைனி. ?
இஷாக்ஹுசைனியின் உடன் பிறந்த சகோதரர்தான் உலகப்புகழ்பெற்ற “கராத்தேவீரர்” “ஷிஹான்ஹுசைனி”. இவரிடம் தற்காப்பு கலை மற்றும் டோக்வாண்டோ கலையில் முறைப்டி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
படத்தில் பைக்கில் வரும் சண்டைக் காட்சிகளில் இதுவரை தமிழ் திரை உலகில் காணாத ஆக்சன் காட்சிகளில் வித்தியாசமாக முயற்சி செய்து படப்பிடிப்பில் கைதட்டல் பெற்றுள்ளார் படகுழுவினரிடம்.
தில்ஷானா. ஹேமா ஆகிய இருவரிடம் காதல் வலையில் சிக்கி லூட்டி அடிக்கும் இஷாக்ஹுசைனி இருவரில் யாரை காதலிக்கிறார் என்பது ரகசியம்.
எதிரியை வீழ்த்த நண்பர்களுடன் போராடும் கதை ஒருபுறம். மக்களுக்காக ஒரு நேர்மையான அரசியல்வாதியை சிம்மாசனத்தில் அமர வைக்க முயற்சி செய்வது மறுபுறம்.
இரண்டு காதலிகளில் யாரை காதலிக்கப் போகிறார் என்பது இன்னொருபுறம். அரசியல்வாதியிடம் கேள்வி கேட்கும் வசனத்தை தன்னுடைய பாணியில் எழுதி அசத்தியிருக்கிறார்.
காதல். அதிரடி அரசியல் , கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து போராடுதல் என முப்பரிமாண கதையை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இஷாக் ஹுசைனி.
வில்லனாக ரிஷத் N.M.இலியாஸ், மும்பை மல்கோத்ரா,.
காதலிகளாக தில்ஷானா, ஹேமா ஆகியோருடன் புதுமுக நடிகர் நடிகை பட்டாளமே
நடித்திருக்கிறார்கள்.போலந்து. ஜெர்மன்.ஆகிய நாடுகளிலும் சென்னை சுற்றுப் பகுதிகளிலும் தான் பிறந்த மதுரை மண்ணிலும் படப்பிடிப்பு நடத்தி அசத்தியிருக்கிறார் இஷாக்ஹுசைனி . விரைவில் அதிக திரையரங்குகளில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கிறது.
இசை :-சதாசிவ ஜெயராமன். ஒளிப்பதிவு :-.தயாள் ஓஷோ. தேவராஜ். எடிட்டிங் :-நவீன் குமார். இணை இயக்கம் தயாரிப்பு மேற்பார்வை என்.எம். இலியாஸ். தயாரிப்பு ஐ இன்டர்நேஷனல் .
PRO
விஜயமுரளி