டாக்டர் காமராஜ் மருத்துவமனையில்
சர்வதேச ஆண்கள் தின கொண்டாட்டம்
விளையாட்டு நட்சத்திரங்கள் கௌரவிப்பு
சென்னை, நவ.19
சர்வதேச ஆண்கள் தினம் இன்று (நவம்பர் 19ந் தேதி) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை, சர்வதேச ஆர்த்தோ கேர் மற்றும் சிகிச்சை மையம் சார்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற விளையாட்டு நட்சத்திரங்களான ஒலிம்பியன்கள் வி.தேவராஜன், என்.முகமது ரியாஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த டாக்டர் டி.காமராஜ் பேசும்போது கூறியதாவது:
சர்வதேச அளவில் ஆண்களின் வாழ்நாள் வயது பெண்களின் வயதைவிட 5 வயது குறைவு.
தொழிற்சாலை விபத்துகளில் பலியாவோர் 92 சதவி¦தம் ஆண்களே.
மது, போதைக்கு அடிமையாகி பாதிக்கப்படுவதும் ஆண்களே.
உலக அளவில் ஆண்களின் விந்தணு உற்பத்தி 50 சதவீதம் குறைந்துவிட்டதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இப்படி பாதிக்ப்படும் ஆண்களை பாதுகாப்பது எப்படி?
விழிப்புணர்வு மட்டுமே ஒரே வழியாகும்.
Ôஎஜூகேட் டு எராடிகேட்Õ என்பதே சிறந்த வழிமுறையாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக எய்ட்ஸ் அதிகரிப்பதை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த Õபுள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமாÕ என்ற வாசகத்தை பிரபலப்படுத்தி சிந்திக்க தூண்டினார்கள்.
அதுபோலவே ஆண்கள் நலத்தை பாதுகாக்க விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
இதுவரை நாம் ரீல் ஹீரோக்களை கொண்டாடி வந்திருக்கிறோம். இன்று சர்வதேச ஆண்கள் தினத்தில் ரியல் ஹீரோக்களை பாராட்டுகிறோம்.
வி.தேவராஜன்
ரியல் ஹீரோக்களில் ஒருவரான வி.தேவராஜன் குத்துச்சண்டை விளையாட்டில் தமிழகத்திலிருந்து தனி முத்திரை பதித்தவர்.
அன்னிய மண்ணில் உலக கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஒரே தமிழக சாதனையாளர் இவர் தான். 1994ம் ஆண்டில் தாய்லாந்து நாட்டிலுள்ள பாங்காக் நகரில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே தமிழக வீரர் என்ற பெருமையை இவர் இன்றளவும் பெற்று வருகிறார்.
தனிநபர் பிரிவு விளையாட்டுகளில் ஒன்றான குத்துச்சண்டை விளையாட்டில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்த மிகப்பெரிய போட்டியான உலக கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வி.தேவராஜனைத் தவிர வேறு யாரும் பதக்கத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1992ம் ஆண்டில் பார்சிலோனாவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். Êசர்வதேச போட்டிகள் பலவற்றில் பங்கேற்று அதில் பதக்கங்களும் வென்றுள்ளார்.
விளையாட்டுத்துறையில் சாதனை புரியும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு வழங்கும் அர்ஜூனா விருதை வி.தேவராஜன் 1995ம் ஆண்டில் பெற்றார்.
1995ம் ஆண்டில் இந்திய ரயில்வேயின் சிறந்த வீரர் விருது பெற்ற இவர் 5 ஆண்டுகள் தங்கப்பதக்கம் வென்று தேசிய சாம்பியன் பட்டமும், 2 ஆண்டுகள் வெள்ளி பதக்கமும் வென்ற இவர் 1989 முதல் 1995 வரை குத்துச்சண்டை உலகில் கோலோச்சினார்.
இப்போது தென்னக ரயில்வேயில் விளையாட்டு அதிகாரியாக சென்னையில் உயர்பதவி வகித்துவருகிறார். இந்திய அணி வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் தேர்வாளர்களில் ஒருவராக வி.தேவராஜன் பொறுப்பு வகித்து வருகிறார்.
என்.முகமது ரியாஸ்
ஏர் இந்தியா நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணியாற்றி வரும் முகமது ரியாஸின் குடும்பத்தினர் அனைவருமே விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
இவர், இந்திய ஹாக்கி அணிக்கு 1998, 1999 ஆகிய 2 ஆண்டுகள் கேப்டனாக பணியாற்றியுள்ளார். 1996ல் அட்லாண்டாவிலும், 2000ம் ஆண்டில் சிட்னியிலும் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
1998ம் ஆண்டில் தாய்லாந்து நாட்டிலுள்ள பாங்காக் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் முகமது ரியாஸ் இடம்பெற்றார்.
இதனால் விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதை 1998ம் ஆண்டு ரியாஸ் பெற்றார். தமிழகத்திலிருந்து இந்திய அணிக்காக விளையாடிய இவர், இந்த விருதை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனிடம் இருந்து பெற்றார்.
ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை 1999ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியிடம் இருந்து இவர் பெற்றார்.
பின்னர் 2012ல் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற இந்திய ஹாக்கி அணியினருக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.
தமிழக ஹாக்கி அணியினரை தேர்வு செய்யும் தேர்வுக்குழு தலைவராக பணியாற்றிவரும் இவர், சமீபத்தில் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் குழுவில் ஒரு உறுப்பினராக Ôஹாக்கி இந்தியா அமைப்பால்Õ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பியன்கள் வி.தேவராஜன், என்.முகமது ரியாஸ் ஆகியோரை சர்வதேச ஆண்கள் தினத்தில் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.
இவ்வாறு டாக்டர் காமராஜ் கூறினார்.
விருது பெற்றபிறகு வி.தேவராஜன் பேசும்போது கூறியதாவது:
சர்வதேச மகளிர் தினவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவதுபோல் ஏன் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுவதில்லை என்ற ஏக்கம் எனக்கு இருந்தது.
அதனை போக்கும்விதமாக இந்த நிகழ்வு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக டாக்டர் காமராஜை பாராட்டுகிறேன்.
ஆண்கள் நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் உழைப்பவர்கள். அன்பானவர்கள். ஆண்களுக்கு பிரச்சனைகள் அதிகம். அவர்கள் நலமுடன் இருந்தால் தான் குடும்பம் நன்றாக இருக்கும் என்றார்.
பின்னர் என்.முகமது ரியாஸ் பேசும்போது கூறியதாவது:
கொரோனா காலத்தில் வேலையின்மை, வருமான இழப்பு, நோய் பாதிப்பு இவற்றால் ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். பொதுவாக விளையாட்டுக்கு முக்கியத்துவம் தந்தால் பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். அவர்களது சுகாதாரம் மேம்படும்.
ஒரு டிரெயினுக்கு என்ஜின் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் ஒருகுடும்பத்திற்கு ஆண்கள் முக்கியம். என்ஜின் சீராக இயங்கினால் தான் குடும்பம் எனும் ரயில் பெட்டிகள் பாதுகாப்பாக செல்லும். எனவே, ஆண்களை பாதுகாப்பது முக்கியம். இந்நாளில் சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி ஆண்களுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆலோசனை பெற 24 மணி நேரமும் இயங்கும் உதவி எண் 98412 66666 அறிமுகம் செய்யப்பட்டது.
ஆண்களுக்கான சிகிச்சை தொடர்பாக 2 நவீன கருவிகள் துவங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஜெயராணி காமராஜ், ராதாகிருஷ்ணன், சித்தார்த், நிவேதிதா ஆகியோர் பங்கேற்றனர்.
………………………