இன்பினிட் சேவா’; – தனித்துவமான டிஜிட்டல் சேவை சென்னையில் பிப்ரவரி 9ஆம் தேதி தொடக்கம்
சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட மூன்று தனித்துவமான சேவைகளை வழங்கும் இன்பினிட் சேவா’ (Infinite Seva) என்ற டிஜிட்டல் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்வு பிப்ரவரி 9, 2024 அன்று சென்னை நகரில் நடைபெற வுள்ளது. இதன் முப்பரிமாண இயக்கமாக (1) “பிரேரணா ஹெல்ப்லைன் அறக்கட்டளை” தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பயனாளர்களிடையே பாலமாகச் செயல்படுதல், (2) “தமிழ்நாடு சேவா அறக்கட்டளை” -கிராம
வளர்ச்சிப்பணிகள் மற்றும் குறிப்பாக ஆலயங்களில் தினமும் பூஜைகள் நடைபெறுவதற்காக அதற்கென முன்வருபவர்களை மற்றும் தன்னார்வலப்பணியாளர்களை ஒருங்கிணைத்து அதை உறுதிசெய்தல், (3) “இன்பினிட் விஷன் இந்திய அறக்கட்டளை” தொழில் முனைவோருக்கான கட்டமைப்பு மற்றும் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வளர்ச்சிக்கான மாற்றத்தை உருவாக்குதல் ஆகிய மூன்று பணிகளைச் செய்வதற்காக இன்பினிட் சேவா”; அமைப்பு தொடங்கப்படுகிறது.
இன்பினிட் சேவா தனது முதல் இரு திட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் பிரமாண்ட விழா சென்னை, நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், ஐயப்பன் கோவில் அருகில், சபனம் அரங்கத்தில் பிப்ரவரி 9, 2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்.
சமூகங்களை மேம்படுத்துதல், நேர்மறையான மாற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் தமிழ்நாட்டில்கிராம முன்னேற்றம் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான பணிகளை செய்யவுள்ள இன்பினிட் சேவாவின் முயற்சிகள் இந்தியாவில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கலாச்சாரநிலப்பரப்புகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.. தொடக்க விழாவில் பங்கேற்போர் விவரங்கள் வரையப்பட்ட விழாவிற்கான அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து விழாவிலும் அதைத்தொடர்ந்து நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டு, தங்களின் அச்சு மற்றும் காட்சி ஊடகம் மூலம் இன்பினிட் சேவா குறித்த செய்தியை விரிவாக மக்களிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
இன்பினிட் சேவா
மேலும் தகவலுக்குத் தொடர்பு கொள்ளவும்: எஸ். விஜயகிருஷ்ணன், செய்தித் தொடர்பாளர், ஊடகவியலாளர், சமூகப் பணியாளர், வங்கியாளர்
Ph: 9600644446