கேஸ்ட்ரால் பவர்8 1 (Castrol POWER1) வழங்கும் இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார், மிகப்பெரிய வெற்றியுடன் சென்னை ஆடிஷனை நிறைவு செய்தது
தேசிய அளவில் பெறப்பட்ட 10,000 விண்ணப்பங்களில் 2249 விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்டன
இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டாருக்கு சென்னையில் உள்ள பைக்கர் சமூகத்திலிருந்து வலுவான ஆதரவு கிடைத்துள்ளது
சென்னை: இந்தியாவின் முன்னணி எண்ணெய் பிராண்டான கேஸ்ட்ரால் பவர்1(Castrol POWER1), வையாகாம்18 (Viacom18) மற்றும் ரஜினி ரேஸிங் அகாடமி (Rajni Academy for Competitive Racing) ஆகியவற்றுடன் இணைந்து, MTVயில் வழங்க இருக்கும் கேஸ்ட்ரால் பவர்1 இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார் நிகழ்ச்சியின் முதல் கட்ட தணிக்கையை சென்னையில் முடித்தது. இந்த நிகழ்ச்சிக்கு இப்பகுதியில் உள்ள ஆர்வமுள்ள மோட்டார் பந்தய வீரர்களிடமிருந்து 2200+ விண்ணப்பங்கள் வந்தது, நாடு முழுவதும் சுமார் 10,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. திறமையான பெண் ரைடர்ஸ் தோளோடு தோள் நின்று, அவர்களின் மகத்தான திறமை மற்றும் செயல்திறனை மிகுந்த ஊக்கத்துடன் வெளிப்படுத்தினார்கள்.
துடிப்பான பைக்கிங் சமூகத்தின் அமோக ஆதரவு, மோட்டார்ஸ்போர்ட் ஆர்வலர்களின் மையமாக சென்னையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பங்கேற்பாளர்கள் முதற்கட்டமாக காணொளி மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர், சென்னை மைதானத்தில் நடைபெற்ற ஆடிஷனில் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். RACR-இன் நிபுணர்கள் உட்பட மதிப்பிற்குரிய நடுவர் மன்றத்திற்கு தேர்வு செய்வது சவால் நிறைந்ததாகவே இருந்தது.
இம்முயற்சியின் முக்கியத்துவம் மற்றும் போட்டியாளர்களின் ஆர்வத்தைப் பிரதிபலிக்கும் வகையில், காஸ்ட்ரால் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரும், சந்தைப்படுத்தல் தலைவருமான திரு. ரோஹித் தல்வார் கூறுகையில், “இந்தியா முழுவதும் மோட்டார் வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் அதிகரித்துள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சென்னையில் இருந்து 2249 விண்ணப்பம் வந்துள்ளது. இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார் மூலமாக எங்கள் நோக்கம் வளரும் திறமையாளர்களுக்கு பந்தயத்தில் ஆர்வத்தைத் தொடர ஒரு தளத்தை வழங்குவதாகும், மேலும் உற்சாகமான பங்கேற்பு நாட்டின் மோட்டார்ஸ்போர்ட் திறமைகளை வளர்ப்பதில் எங்களின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”
பெருநகரங்களில் நடத்தப்படும் கடுமையான திறன் போட்டிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், புகழ்பெற்ற இந்திய மோட்டார் பந்தய ஜாம்பவான் ரஜினி கிருஷ்ணனால் கோவையில் உள்ள காரி மோட்டார்வேயில் தீவிரப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள். இறுதி வெற்றியாளர்கள் மறக்க முடியாத மோட்டோ-பந்தய அனுபவத்திற்காக ஐரோப்பாவில் உள்ள Castrol Honda LCR MotoGP™ குழுமத்தின் மோட்டோ ரேஸிங் வசதியைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்..
இந்த முயற்சிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்த RACR இன் நிறுவனர் ரஜினி கிருஷ்ணன், “இந்தியாவின் மோட்டார்ஸ்போர்ட் திறமைசாலிகளை வெளிக்கொணர ஒரு தேசிய தளத்தை உருவாக்கியதற்காக காஸ்ட்ரோல் இந்தியாவிற்கு எனது பாராட்டுகள். எனது RACR அகாடமியில் நாட்டின் மிகச்சிறந்த மோட்டார் சைக்கிள் பந்தயத் திறமையாளர்களுக்கு வழிகாட்டி, உலகளாவிய அங்கீகாரம் மற்றும் வெற்றியை நோக்கி அவர்களை வழிநடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்..”
தணிக்கையின் முதல் கட்டம், இளம் பெண்களின் சில ஊக்கமளிக்கும் கதைகளைக் கண்டது, அவர்கள் பழமைவாதத்தை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்ஸில் தங்கள் கனவை ஒளிரச் செய்தனர். ஜெகதிஸ்ரீ, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் ஒரு லட்சிய இளம் பெண் மோட்டோ ரேசர், பைக்கிங் மீதான தனது ஆர்வத்தைத் தொடர அவரது குடும்பத்தினரின் அனைத்து முரண்பாடுகள் மற்றும் கடுமையான எதிர்ப்புகளை உடைத்து இந்த போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார். “என்னைப் பொறுத்தவரை, என் தந்தையே எனது மிகப்பெரிய ஊக்கம். இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டாரில் பங்கேற்பதன் மூலம் எனது மோட்டோரேசிங் கனவைத் தொடர என்னை ஊக்குவித்ததற்காக அவருக்கு நான் இந்த பெருமையை சமர்ப்பிக்கிறேன்”என்று அவர் கூறினார்..
கோயம்புத்தூரைச் சேர்ந்த நிஷா எஸ் தனது கதையைச் கூறும்போது, அவரின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அர்ப்பணிப்பு ஒரு படி மேலானது. சென்னையில் போட்டி நடக்கிறது என்று தெரிந்த உடன் இந்த இளம் மோட்டோஸ்டார் உடனடியாக பதிவு செய்து, ஆடிஷனுக்காக இரவோடு இரவாக சென்னைக்கு பயணம் செய்தது மட்டுமல்லாமல், போட்டிக்குத் தயாராவதற்காக ஒரு பைக்கையும் வாங்கியுள்ளார். இந்த போட்டியின் மூலம் அவரது குறிக்கோளானது விளையாட்டின் மீதான தனது ஆர்வத்தை மேம்படுத்துவது மற்றும் ஒரு மோட்டோரேசராக தனது திறமைகளை மேலும் மெருகூட்டுவதாகும்.
மற்ற பங்கேற்பாளர்களில் முன்னாள் மோட்டோரேசிங் சாம்பியன்கள் மற்றும் ஸ்டண்ட் பைக்கர்களும் அடங்குவர், இதில் சென்னையைச் சேர்ந்த சூர்யா பிஎம், சென்னையில் மெருகேற்றப்பட்ட மோட்டோரேசிங் சாம்பியன், முன்னாள் 2019 எண்டூரன்ஸ் சாம்பியன், 2022 ஜிடி கோப்பை சாம்பியன் மற்றும் பலமுறை தேசிய சாம்பியன் வென்றவர் ஆவார்.
மோட்டோ-ஸ்போர்ட்ஸ் சிறப்பை ஆதரிப்பதில் காஸ்ட்ரோல் பவர்1-இன் பந்தய மோட்டார் சைக்கிள்களுக்கு ஏற்றவாறு மேம்பட்ட லூப்ரிகண்டுகளை உருவாக்கி வருகிறது. இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார் பிளாட்ஃபார்ம் மூலம், காஸ்ட்ரோல் ரைடர்ஸ் உலக அரங்கில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்கிறது.
About Castrol India Limited
Castrol India Limited is one of India’s leading lubricant companies with brands such as Castrol CRB, Castrol GTX, Castrol Activ, Castrol MAGNATEC and Castrol VECTON, which are the brands of choice for millions of consumers and customers across the country. The Company also operates in select segments like High Performance Lubricants and metalworking fluids used in a wide variety of industries such as automotive manufacturing, mining, machinery, and wind energy. Castrol has a large manufacturing and distribution network in India with three blending plants and a distribution network of 350 distributors who reach consumers and customers through over 100,000 retail outlets. For more information, please visit www.castrol.co.in.
About Viacom18
Viacom18 Media Pvt. Ltd. is one of India’s fastest growing entertainment networks and a house of iconic brands that offers multi-platform, multi-generational and multicultural brand experiences. Viacom18 defines entertainment in India by touching the lives of people through its properties on air, online, on ground, in cinemas and merchandise. Its portfolio of 38 channels across general entertainment, movies, sports, youth, music and kids genres delights the consumers across the country with its eclectic mix of programming. JioCinema, Viacom18’s OTT platform, is one of India’s leading streaming services and most popular destination for live sports. Viacom18 Studios has successfully produced and distributed iconic Hindi films and clutter-breaking regional films for over 13 years in India.
About RACR
Based in Coimbatore, RACR is India’s top moto-racing Academy that has graduated more than 3,000 Riders/Racers across the world since 2015. RACR is the brainchild of Rajini Krishnan, India’s most successful Motorcycle Racer, and the Fastest Indian in Two wheels.
For more information, please get in touch with:
Nishank Anand (+91 99133 98442), nishanka@avianwe.com
Anusha Banerjee (+91 96188 62312), anushab@avianwe.com