இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்ற டைரக்டர் ஆர்.கண்ணனின்
“தள்ளிப் போகாதே”.

அதர்வா & அனுபமா பரமேஸ்வரன் நடித்த தமிழ்த் திரைப்படம்
“தள்ளிப் போகாதே”.
இப்படத்தை மசாலா பிக்ஸ் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு உலக நாடுகளில் படமாக்கப்பட்டது. அந்த அழகான படப்பிடிப்பிற்கு (IIFTC) இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்றுள்ளது. இந்த விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது.


இயக்குநர் தயாரிப்பாளர்
அனுராக் பாசு, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ரோனி லஹிரி, தயாரிப்பாளர் வர்தா கான் நந்தியாத்வாலா, ஆகியோர் முன்னிலையில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஓம்சரண் விருதை பெற்றார். இந்நிகழ்ச்சியில் பாடகர், இசை தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் யோஹானி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.