’இந்தியன் 2’ திரைப்பட விமர்சனம்
இந்தியத் திரைப்படமான தமிழ்சினிமா இந்தியன்- 2 -யாரும் எதிர்பார்க்காத விதத்தில் விஷுவல்ஸ், VFX டிஜிட்டல் கலந்த நிகழ்வுகள் வடிவமைப்புடன் இந்த பிரம்புடன் மிரட்டும் 27- வருடங்களுக்கு பிறகு வரலாறு படைக்கிறது.
இந்தியன் – 2
நடிகர்கள் :- உலக நாயகன் சேனாதிபதி என்ற கதாபாத்திரத்தில் ஜொலிக்கும். (கமல்ஹாசன்)அவர்கள், சித்தார்த், ராகுல் பிரீத், எஸ்.ஜே.சூரியா,பிரியா பாவனி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, விவேக், ஜெகன்,
ரிஷி காந்த், ஏ.ஐ.நெடுமூடி எஸ்.ஜேசூரியா வேணு.டெல்லி கணேஷ், ரேணுகா, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, மனோபாலா,குல்சான்,ஜாகிர் உசேன்,இன்னும் பலர்.
பிரமாண்டம் இயக்குனர் :- -சங்கர்.
ஒளிப்பதிவு :- ரவிவர்மா
கலை இயக்குனர் :-முத்துராஜ்
மியூசிக் : – அனிரூத் .
எடிட்டிங் :- ஸ்ரீகர்பிரசாத்,
தயாரிப்பாளர்கள் :- -லைகா :- சுபாஸ்கரன். தமிழ்க்குமாரன்,
ரெட் ஜெயண்ட் முவீஸ். உதயநிதி ஸ்டாலின் அலிராஜய்யா…
கதை.
சித்தார்த் தனது நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த்
ஆகியோருடன் சேர்ந்து நடத்தும் யூடியுப் சேனல் மூலம் ஊழல்வாதிகளின்
முகத்திரையை கிழித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறார்.
அது முடியாமல் போக, இந்தியன் தாத்தாவை திரும்பி அழைத்து வருவதற்கான முயற்சிகளில்
ஈடுபடுகிறார். அதற்காக அவர் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளும்
பிரச்சாரம், தைவானில் இருக்கும் இந்தியன்
தாத்தா கவனத்திற்கு போகிறது. அவர் மீண்டும் இந்தியா வருகிறார்.
முதல் பாகத்தில் தமிழ்நாட்டு ஊழல்வாதிகளுக்கு
உயிர் பயத்தை காட்டிய இந்தியன் தாத்தா,
இந்த முறை இந்தியா
முழுவதும் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்குகிறார்.
அதே சமயம், அவர் இந்தியாவுக்கு திரும்ப வர வேண்டும் என்று
விரும்பிய சித்தார்த்தே அவரை வெறுக்கிறார்.
மறுபக்கம் அவரை தேடிக்கொண்டிருக்கும் விசாரணை அதிகாரிகளும் அவரை நெருங்குகிறார்கள்.
அதிகாரிகளிடம் இருந்து இந்தியன் தாத்தா தப்பித்தாரா?,
சித்தார்த் அவரை வெறுப்பது ஏன்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இந்தியன் முதல் பாகத்தில் இருக்கும் பிரமாண்டம் இதில்
அளவுக்கு அதிகமாக இருந்தாலும், பலம் இல்லாத திரைக்கதையும், அதனுடன் ஒட்டி பயணிக்காத
பிரமாண்டமும் படத்தின் பலவீனங்களாக இருந்தாலும், கமல்ஹாசனின் நடிப்பு
மற்றும் சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோரது கதாபத்திர
வடிவமைப்புகள் பலவீனத்தை மறைத்து படத்தை ரசிக்க மிரள வைக்கிறது.
நாட்டில் நடக்கும் பெரிய பெரிய ஊழல்களுக்கு எல்லாம் சிறிய அளவில்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளே மூலக்காரணம் என்பதை சொல்ல முயற்சித்திருக்கும்
இயக்குநர் ஷங்கர், இலவசங்கள் வழங்கும் தமிழக அரசியல் பற்றி மேலோட்டமாக
பேசிவிட்டு, குஜராத் தொழிலதிபர்களை பற்றியும், அவர்களின்
ஊழல் பின்னணி பற்றியும் விரிவாக பேசியிருப்பதும், அதை
தனிமனித ஊடகமான யூடியுப் உடன் இணைத்து சொல்லியிருப்பது கவனம் ஈர்க்கிறது.
முதுமையான உடல்மொழியை கச்சிதமாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறும் கமல்ஹாசன்,
ஊழலுக்கு எதிராக பேசும் வசனங்கள்
கைதட்டல் பெறுவதோடு, தனது நடிப்பால் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறார்.
சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, மறைந்த
நெடுமுடி வேணு, விவேக் ஆகியோரது அளவான நடிப்பு
திரைக்கதையோட்டத்
தற்கு பலம் சேர்த்திருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா
குறைவான காட்சிகளில் வந்தாலும், மூன்றாம் பாகத்தில் அவரது வேடம் பெரிய அளவில்
இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் “தாத்தா வராரே…” பாடல்
திரையரங்கையே அதிர வைக்கிறது. மற்ற
பாடல்களும் ஓகே ரகம் தான். பின்னணி இசை வேகமான திரைக்கதைக்கு ஏற்ப
பயணித்திருந்தாலும், இந்தியன் முதல் பாகத்தின் பின்னணி இசையே முன்னணி பெறுகின்றன.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு இயக்குநரின் பிரமாண்ட கற்பனைக்கு பெரிதும்
கைகொடுத்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு மூன்று
மணி நேரம் படத்தை அலுப்பில்லாமல் பார்க்க வைக்கிறது. கலை இயக்குநர் மற்றும்
சண்டைப்பயிற்சியாளர் ஆகியோரது பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
முதல் பாகத்தை ஓப்பிட்டு பார்த்தால் இயக்குநர் ஷங்கர் இதில் சற்று
தடுமாறியிருப்பது தெரிந்தாலும், படத்தின் சண்டைக்காட்சிகள், இந்தியாவின் பெரும்
தலைகளை இந்தியன் தாத்தா நெருங்கும் காட்சிகள், காலண்டர் மற்றும் தாத்தா வராரே
ஆகிய பாடல்கள் உள்ளிட்டவை மூலம் பிரமாண்டம் என்ற தனது மாயாஜாலம் மூலம்
மக்களை முழுமையாக திருப்திப்படுத்தி விடுகிறார்.
இறுதிக் காட்சியில் நாடே கொண்டாடிய இந்தியன் தாத்தாவுக்கு
எதிர்ப்பு வருகிறது. அது ஏன்? என்ற கேள்விக்கான
விடையாக மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம்
மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
கோ பேக் இண்டியா’’ ‘’ GO BACK INDIA’’ என்ற வசனம் வரும் போது உலக நாயகன் கமல் ஹாசன் 28 வருடத்திற்கு பிறகு மீண்டும் இளமைக்காலத்திற்கே ஏற்பே பயணிக்கிறார். என்பது போல் ரசிகர் மனதில் தோன்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிஒயத்தில் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்பே 360 த்ரீ சிக்ஸ்டி டிகிரி ஒரு கடைசி ஷாட் காட்சியில ‘360’ பிரிஸம் லென்ஸை இதுல பயன்ப் படுத்தி படத்தை எடுத்திருப்பார் . இந்த இண்டியன் -2 படத்தில் 10.m m to 360° Degree லைன்ஸ்ல படமுழுவதும் பயன் படுத்திருக்கிறார்.
கலை இயக்குனர் முத்துராஜ் நிறைய இடங்களில் படத்திற்கு 3டி எபக்ட் பாடல் காட்சியில் கண்ணுக்கு குளிர்ச்சியை காட்டிப் பயன்ப்படுத்திஇருக்கிறார்.
கமல் சார் கையில்வர்ணம்க் கலைக் காட்சியில் காட்டும் போது VFX வர்ணமக்கலையை ரொம்பவும் ரொம்பவும் காட்சிக்காட்சியில் தத்துருமா அருமையா படத்திற்கு காட்சி அமைந்திருந்தன.
இசையமைப்பாளர் அனிரூத் படத்திற்கு பக்கபலமா அமைந்திருந்தன . எப்போதும் போல் இசையமைப்பை பணியை வெகு சிறப்பா செய்ந்திருக்கிறார்
மொத்தத்தில்,
‘இந்தியன் சேனாதிபதி தாத்தா 2’ நம்மை ஏமாற்றவில்லை.