பிசிஐ – இக்சோரா கிளப் ஹவுஸ் ஆப் அறிமுக விழா !!

Share the post

பிசிஐ – இக்சோரா கிளப் ஹவுஸ் ஆப் அறிமுக விழா

கோலிவுட் பிரபலங்கள் கலந்துக்கொண்ட பிசிஐ – இக்சோரா கிளப் ஹவுஸ் ஆப் அறிமுக விழா

மகளிர் உரிமைத்திட்டத்தில் பெறும் 1000 ரூபாயை சேமியுங்கள்! – பிசிஐ இக்சோரா கிளப் ஹவுஸ் ஆப் அறிமுக விழாவில் நடிகை வனிதா விஜயகுமார் அட்வைஸ்

10 ரூபாய்க்கு கஷ்ட்டப்பட்டவள் நான், – பென்ஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேச்சு

குடும்பங்கள் ஒன்று சேர்ந்து மகிழ சரியான தேர்வு பென்ஸ் கிளப் – நடிகை வனிதா விஜயகுமார்

இந்திய அளவில் புகழ் பெற்று விளங்கும் பென்ஸ் வெக்கேஷன் கிளப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குவதோடு, ஒவ்வொரு ஆண்டும் புது புது சலுகைகளையும், கொண்டாட்டங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது பிசிஐ – இக்சோரா கிளப் ஹவுஸ் (BCI – IXORA CLUB HOUSE) என்ற புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆப் அறிமுக விழா சென்னை பெரும்பாக்கத்தில் புதிதாக அமைந்துள்ள பொலினி மலையோர கிளப் ஹவுஸில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகைகள் வனிதா விஜயகுமார், விசித்ரா,உமா ரிஸாஸ்,நிஷா, அனுராதா,ஷார்மி , பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சென்ராயன், ,சுரேஷ் சக்ரவர்த்தி,பாடகர் வேல்முருகன் பாடகர் யு.கே.உதயகுமார், நாஞ்சில் விஜயன், காஜல் உட்பட திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய பென்ஸ் சரவணன், “வனிதா விஜயகுமார் சகோதரி எங்களுக்கு பெரும் உறுதுணையாக இருக்கிறார். அவர் பல்வேறு யோசனைகளை எங்களுக்கு அளித்து வருகிறார். அவரிடம் இருந்து நாங்கள் பல விசயங்களை கற்றுக்கொள்கிறோம். அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் எங்களை புதி புதிதாக செய்ய வைக்கிறது, அவரது தொடர் ஒத்துழைப்புக்கு நன்றி.

நாங்கள் தற்போது 40 ஓட்டல்களை இந்த ஆப்பில் இணைத்துள்ளோம். முழுக்க முழுக்க எங்களுடைய முதலீடு தான் இதில் இருக்கிறது. காரணம், எங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அனைத்துவித வசதிகளும் கொண்ட ஓட்டல் அறைகள் இந்தியா முழுவதும் கிடைக்க வேண்டும் என்பது தான். அதற்கான தான் இந்த ஆப்பை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளோம்.

எங்கள் நிறுவனத்தின் நீங்கள் உறுப்பினராவது மிகவும் எளிது. இந்த ஆப்பை டவுன் லோட் செய்து, இதன் மூலம் நீங்கள் உறுப்பினராகலாம். இந்த ஆப் மூலம் இந்தியா முழுவதும், பல வசதிகள் கொண்ட ஓட்டல்கள், ரிசார்ட்கள் ஆகியவற்றில் அறைகளை பெறுவதோடு, குடும்பமாக சுற்றுலா செல்வது, டிரக்கிங் போன்ற விசயங்களில் ஈடுபடலாம்.

ஆண்டு உறுப்பினர், விஐபி உறுப்பினர், எலைட் உறுப்பினர் என பல வகைகளில் உறுப்பினர் வசதிகள் எங்களிடம் இருக்கிறது. ஆனால், அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் அவர் தேவைக்கு ஏற்ப பல வசதிகளும், சலுகைகளும் நிச்சயம் உண்டு” என்றார்.

பென்ஸ் கிளப்பின் பிராண்ட் அம்பாசிட்டரான நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், “பல நிகழ்ச்சிகள், நிறுவனங்களுக்கு திரை பிரபலங்கள் பிராண்ட் அம்பாசிட்டராக இருப்பதுண்டு, ஆனால் இந்த நிறுவனத்திற்கு நான் விளம்பர தூதுவரானதற்கு காரணம் லவ் மட்டுமே. லவ் அண்ட் லவ் ஒன்லி. இங்கு இருக்கும் என் சகோதர, சகோதரிகளின் லவ்வுக்காக மட்டுமே இதில் நான் பயணிக்கிறேன். இவர்கள் பல பிரச்சனைகளில் என்னுடன் நின்றுக்கிறார்கள், இனியும் நிற்பார்கள். அவர்களுக்காக நான் என்றுமே இருப்பேன்.

தற்போதைய வேகமாக வாழ்க்கையில் குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிடுவது, மனம் விட்டு பேசுவது போன்ற நிகழ்வுகள் அறிதாகிவிட்டது. அப்படி ஒரு நிகழ்வு நடப்பதே இன்று ஒரு திருவிழா போல இருக்கிறது. அதே சமயம், குடும்பங்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதற்கான வசதிகள் படைத்த வீடுகள் அனைவருக்கும் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களின் கவலை போக்குவது தான் பென்ஸ் கிளப்பின் முதல் நோக்கம்.

இதுபோன்ற கிளப்புகளில் உறுப்பினராகும் போது, மாதத்திற்கு ஒரு நாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றாக சேர்ந்து இருப்பதோடு, விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஈடுபட்டு நம் கவலைகளை மறந்து சந்தோஷமாக இருப்பதோடு, குழந்தைகளையும் மகிழ்விக்கலாம். அதற்காவே பொதுமக்கள் இதுபோன்ற கிளப்புகளில் உறுப்பினராக வேண்டும் என்பது விருப்பம்.

சுற்றுலா கிளப்புகள் பல இருந்தாலும் பென்ஸ் கிளப் தான் என்னுடைய பேவரைட் காரணம், குறைந்த கட்டணத்தில் அதிகமான சலுகைகளை வழங்கும் இவர்கள், குடும்ப உறுப்பினர்களை மையப்படுத்தி அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கிறார்கள். இவர்களுடைய ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்கள் குறும்பத்துடன் நேரத்தை கழிப்பதற்கான மிக சரியான இடமாக இருக்கிறது.” என்றார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் ரூ.1000 வழங்கியது குறித்து வனிதா விஜயகுமாரிடம் கேட்டதற்கு, “தமிழ்நாடு அரசின் மிக சிறப்பான திட்டம் மகளிர் உரிமைத்தொகை திட்டம். அதை மிக சரியானவர்களுக்கு கொடுப்பதற்கு அரசு சிறப்பாக செயல்பட்டது. அதேபோல், ரூ.1000 வாங்கும் என் தாய்மார்கள், சகோதரிகள் அந்த பணத்தை சரியான முறையில் செலவிட வேண்டும். இல்லை என்றால், அந்த பணத்தை செலவு செய்யாமல் சேமித்து வையுங்கள், அது உங்கள் எதிர்காலத்துக்கு பயன்படும். ஆயிரம் ரூபாய் என்பது சாதாரணதல்ல, நான் பத்து ரூபாய்க்கு கூட கஷ்ட்டப்பட்டவள் என்பதால் சொல்கிறேன்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *