தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் – பாரதி

பாரதியின் கனவை நிஜமாக்கிய படம் ‘அம்மா உணவகம்’

அன்னதானத்தின் அருமை கூறும் படம் ‘அம்மா உணவகம்

மக்களிடம் ‘அம்மா உணவகம்’ என்பது பெயர் பெற்ற ஒன்றாகிவிட்டது.

அன்று
‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்’ என்று பாரதி கண்ட கனவை உண்மையில் இன்று நிறைவேற்றி வருபவை அம்மா உணவகங்கள்தான்.

சென்னையில் பசித்தவர்களின் புகலிடமாக ஆங்காங்கே இருக்கும் அம்மா உணவகங்கள் மாறி இருக்கின்றன.குறிப்பாக ஊரடங்கு காலத்தில் அனைவரையும் வரவேற்று வயிற்றுக்கு உணவூட்டிக்கொண்டிருக்கும் தாய்கள் இவை.
சொந்த ஊரைப் பிரிந்து பெருநகரங்களில் வாழும் எத்தனையோ பேருக்கு பசியாற்றும் தாயாக அம்மா உணவகம் இயங்கி வருகிறது.
அம்மா உணவகத்தின் பெருமையையும் அது சார்ந்த தாக்கங்களையும் அடிப்படையாக வைத்து ‘அம்மா உணவகம்’ என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது .
‘அன்னமிட்ட தாய்க்கு சமர்ப்பணம்’ என்ற மேற்கோளுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்திற்குக் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் விவேகம் .K.சுரேஷ்
இப்படத்தில்
நாயகர்களாக
அஸ்வின் கார்த்திக் (“பொண்டாட்டி தேவை” பட நாயகி அஸ்வினி அவர்களது மகன்)
“குள்ளபூதம்” சின்னத்திரை தொடர் புகழ் “இந்திரன்”
விகடன் சீரியல்கள் புகழ்
“சசி சரத்”
நாயகிகளாக
“செந்தூரப்பூவே” தொடர் புகழ் ஶ்ரீநிதி
பாத்திமா இப்ராஹிம்
( தயாரிப்பாளரின் மகள்)
மேலும்
முக்கிய கதாபாத்திரங்களில்
நாஞ்சில் சுவாமி
(யோகி பாபுவின் டூப்)
தமிழ்ச்செல்வன்
( சேலம் RR பிரியாணி உரிமையாளர்)
இவர்களுடன்,
இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார் ,சுப்பிரமணிய சிவா,சரவண சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஒரு வணிக சினிமாவுக்கான அத்தனை அம்சங்களுடனும் அம்மா உணவகத்தின் பெருமையையும் கூறும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது.
ஒளிப்பதிவு -மோகன ராமன், இசை -எஸ் .ஷாந்தகுமார், படத்தொகுப்பு -உதயா கார்த்திக், வசனம் -நியூட்டன் , பாடல்கள் கிருதியா, தொல்காப்பியன், ஜான் தன்ராஜ், சண்டைப்பயிற்சி- ஸ்டண்ட் சரண், நடனம் சாய் சரவணா.
படத்தை எஸ். எம். குமாரசிவம் பெருமையுடன் வழங்க, படிக்கட்டு பாய் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.பி.முகமது இப்ராகிம் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு அப்துல் அஜீஸ்.
தமிழகமெங்கும் ஆக்ஷன் – ரியாக்ஷன் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
படத்தில் இடம்பெறும் ‘மனமே மனமே கலங்காதே தினமே’ என்கிற பாடல், இந்த கொரோனா காலத்தை எதிர்கொண்டு மீண்டு வரும் உத்வேகத்தை தருவதாக அமைந்திருக்கிறது.
அம்மா உணவகம் பற்றியும் அதனால் பயன் பெற்றவர்கள் பற்றியும் விளக்கும் வகையில் கருத்துகளைப் பெற்று இப்படத்தின் விளம்பரத்துக்கு பயன்படுத்தவிருக்கிறார்கள்.
அதற்காக
‘அம்மா உணவகம் ‘ படக்குழு ஒரு போட்டி அறிவித்திருக்கிறார்கள். அம்மா உணவகம் பற்றிய உங்கள் அனுபவங்களை ஒன்றரை நிமிட வீடியோவாக பேசி வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள். தேர்வு செய்யப்படும் வீடியோக்களுக்கு விழா மேடையில் பரிசுகள் உண்டு.
நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் அடுத்ததாகத் தயாரிக்கும் படத்தில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
வீடியோக்களை வாட்ஸ் அப்பிலும் மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண் : 9791125244
மின்னஞ்சல் முகவரி :
unavagama@gmail.com
நிலைமை சீரானதும்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து திரையரங்குகள் திறந்ததும் அம்மா உணவகம் திரையரங்குகளில் வெளியாகிறது.