இட்லி கடை “திரை விமர்சனம்!

Share the post

“இட்லி கடை “
திரை விமர்சனம்…

நடித்தவர்கள்:- தனுஷ், ராஜ் கிரண், சத்யராஜ்,பார்த்திபன், அருண்விஜய்,நித்யாமேனன், ஷாலினி பாண்டே, சமூத்திரக்
கனி,ஆடுகளம் நரேன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-தனுஷ்

மியூசிக்:- ஜி.வி பிரகாஷ் குமார்.

ஒளிப்பதிவு:-கிரண்.

படத்தொகுப்பு:-
ஜி.கே.பிரசன்னா

தயாரிப்புகள்:- ஆகாஷ் பாஸ்கரன்

முன்னணி நடிகர்களில் சிறந்த நடிகர் தனுஷ் இயக்கி

நடித்துள்ள இந்த இட்லி கடை திரைப்படம் …

ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது.

எப்படி இருக்கிறது. என்பதை இந்த திரைப்பட கதைக்களத்தை பார்க்கலாம்…

அப்பா அம்மாவையும் இந்த சொந்த ஊரையும் விட்டுட்டு தனுஷ் (முருகன்) வெளி நாட்டுக்கு செல்வது சிவனேசன்(ராஜ்கிரண்)க்கு கொஞ்சமும் இஷ்டமும் இல்லை இருந்தாலும், தனது மகன் ஆசைப் படுகிறானே என்பதற்காக அவர் சரி என்று அவர் சொல்லுகிறார். இந்த ஊரைவிட்டுட்டு வெளிநாட்டுக்கு செல்கிறார்.

தனுஷ். சில‌ வருடங்கள் செல்ல, சத்யராஜின் ஏஃப்சி

என்ற நிறுவனத்தில் மூதன்மை செஃப் ஆக பணிபுரிகிறார்
தனுஷ். இருந்தாலும் அவருக்கு தனது

சொந்த ஊரில் இருக்கும் மன நிம்மதி மனஅமைதி கொஞ்சம் கூட அங்கு இல்லை.

சத்யராஜின் மகளான ஷாலினி பாண்டேவும் தனுஷும் காதலிக்கிறார்கள், அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது.

இருப்பினும், இது ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய்க்கு கொஞ்சமும் பிடிக்க
வில்லை. அதனால்

திருமணத்திற்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கிற சூழ்நிலையில்,

இப்படி இருக்க திடீரென்று தனுஷின் அப்பா ராஜ்கிரண் இறந்து விடுகிறார்.

இந்த தகவலை கேட்டவுடன் பாங்காக்கில் இருந்து உடனடியாக தனது

ஊருக்கு வருகிறார் தனுஷ்.

தந்தையின் மரணத்தின் துயரத்தில் இருந்து மீளாமல் இருக்கிற தனுஷுக்கு அடுத்து

பெரிய வேதனையாக இருக்கும் நிலையில். அப்பா இறந்த நிலையில் இருக்க

அடுத்தது அவருடைய அம்மாவும் இறந்து விடுகிறார், வாழ்க்கையே

நொருங்கும் நிலையில் மன வேதனையில் உடைந்து விடுகிறார்.

இருப்பினும், என்ன நடந்தாலும் திருமணத்தை நடத்த வேண்டும், இது எங்கள்

குடும்பத்தின் கெளரவ பிரச்சனை என்று சத்யராஜ் கூறுகின்றனர்,

அப்பா அம்மா இருவரின் இறந்த வேதனையில் இருக்க நான்

திரும்பவும் ஊருக்கு வரமுடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என தனுஷ் சொல்கிறார்.

இதனால் திருமணம் நடக்க முடியாதபடி போகின்றன.

இதனால் சத்யராஜ் குடும்பத்தில் பெரும் கோபம் வந்து தனுஷ் மீது விழுகிறது.

‌இந்த சூழ்நிலையில் மறுபடியும் தனது தந்தையின்

சிவனேசன் இட்லி கடையை எடுத்து நடத்த தனுஷ் முடிவு செய்கிறார்.

தனுஷுக்கு துணையாக நித்யா மேனன் என்ட்ரி தருகிறார். தனது

தங்கையின் திருமணம் நின்றுபோனதை நினைத்து பெரும் கோபத்துடன்

தனுஷின் இருக்கும் ஊருக்கு வருகிறார் அருண் விஜய். தனுஷை அடித்து உதைக்கிறார்.

ஆனால் தனுஷ் அமைதியாக அடிகளை வாங்கிக் கொள்கிறார்.

இட்லி கடையை அருண் விஜய் அடித்து தீயிட்டு முற்படும்போது

தனுஷ் திருப்பி அருண் விஜய்யை அடிக்கிறார். இது மிகப்பெரிய பிரச்சனையாக

மாறுகின்றன. அருண் விஜய் டூ தனுஷ் என்கின்ற சூழ்நிலை

ஏற்படுகிறது.
இதன் பிறகு என்ன நடந்தது என்பது. படத்தின் மீதி கதைக்களம்.

நாயகன் தனுஷ் இயக்குநர் தனுஷ் ஒரு அழகானகதையை எமோஷனலான திரைக்கதையுடன் நமக்கு கொடுத்துயுள்ளார்.

திரைக்கதையில் ஏதோ ஒன்று இருந்தாலும் இடத்திற்கு இடம் கதை நல்லவே போகிறது.

எமோஷனல் காட்சிகளை தனுஷ் சிறப்பாக இயக்கியுள்ளார்.

ராஜ்கிரணுக்கு பின் தனுஷ் அந்த கடையை எடுத்து

நடத்துவது, சண்டைக்கு சண்டை போடுவது தீர்வு

அல்ல, அகிம்சைதான் தீர்வு தரும் என அப்பா சொன்ன வார்த்தையை சிறப்பு. அதை

திரைக்கதையில் காட்சிகளில் அமைத்த விதம் நல்ல இருந்தது. அதே போல் தனுஷை அந்த

ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தருணம், தனுஷுக்கு துணையாக தெய்வமாக

ராஜ்கிரண் வந்து நிற்பது, இடைவேளை காட்சி கிளைமாக்ஸ்

வரை அனைத்துமே ரசிக்கும்படியாக இருக்கிறது.

எமோஷனலாக உள்ளது. எமோஷனலாக கனெக்ட் ஆகும்.

படத்தில் வந்த கதாபாத்திரங்களின் பாகங்கள் ரசிக்கும்படியாக இருந்தது.

அருண் விஜய், அவரது ஈகோ தனமான நடிப்பில் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

இப்படியொரு கதாபாத்திரத்தை எந்த ஒரு முன்னணி நடிகர் ஏற்று நடிக்க

அதை செய்த அருண் விஜய்க்கு தனி பாராட்டுக்கள்.

கீதா கைலாசம் மற்றும் ராஜ்கிரண் கதாபாத்திரங்கள் மனதை தொடுகின்ற. அவர்கள்

கதாபாத்திரத்தை எழுதிய விதத்தை தனுஷை பாராட்டலாம்.

பார்த்திபன் இன்ஸ்பெக்டராக ரோல் இருந்தாலும் கடைசியில் கைதட்டல்களை
பெறுகிறார்.

சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி ஆகியவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது.

அவர்களுடைய கதாபாத்திரத்திற்கு நிறைய இடம்

சிறப்பாக இருப்பதால் .
இன்றொரு பலம்.

அது, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான்.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை மற்றும் இரண்டிலும்

பட்டையை கிளப்பும் கிறார் படத்தை நல் வெற்றிப்பாதைக்கு எடுத்து செல்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. அதற்கு ஒளிப்பதிவாளர்
கிரணுக்கு பாராட்டுக்கள்.

எடிட்டிங் சூப்பர் டெக்னிக்கல் விஷயங்களில் சூப்பர் .

தனுஷ், அருண் விஜய், கீதா கைலாசம், ராஜ்கிரண் எதார்த்தமாக நடித்துள்ளார்.

கதைக்களமும் அழகான திரைக்கதையும்

மனதை தொடும் எமோஷனல் காட்சிகள்

பாடல்கள், பின்னணி இசை ஒளிப்பதிவுகள். சிறப்பாக உள்ளது.

மண்மணம் மாறாத கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள

கிராமத்தில் நடக்கும் திரைக்கதைக்களம்.

படம் பார்த்தத்தில் , இந்தசிவனேசன் இட்லி கடையில் சாப்பிட வரும்

வாடகையாளருக்கு வாழை இலை போட்டு சாப்பிட்டு

இட்லிக்கு, சாம்பாரை உற்றி செம ரூசியான சுவையை‌ கொடுத்துள்ளார்.

நடிகர், இயக்குநர், தனுஷ்கோடிக்கு ரசிகர்பெருமக்களின். வாழ்த்துக்கள்.
வாருங்கள்!!!

வாருங்கள்!!! திரையரங்கு களில் சாப்பிட சிவனேசன் இட்லி
கடைக்கு!!! வணக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *