ஜெ.துரை
ஹியூமன் ரெயின்போ விஷ் பவுண்டேஷன் சார்பில் தொழில் முனைவோர் மற்றும் இளம் சாதனையார்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டது

சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஹியூமன் ரெயின்போ விஸ் பவுண்டேஷன் (human rainbow wish foundation) சார்பில் 5ஆம் ஆண்டு
தொழில் முனைவோர் மற்றும் பல்வேறு துறையில் சாதனை படைத்தவரும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் நடைபெற்றது

(HRWF) ஹியூமன் ரெயின்போ விஷ் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஷேக் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெரிதும் அறியப்படாத முன்னேறி வரும் தொழில் முனைவோர்களை அடையாளப்படுத்தி அவர்களை கௌரவிக்கும் வகையிலும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

விளையாட்டுத்துறை,திரைத்துறை சமூகப் பணி மற்றும் மாற்றுத்திறனாளி சாதனையாளர் போன்றவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் திரைத்துறை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்