வெப்பம் குளிர் மழைதிரை விமர்சனம் !!

Share the post

வெப்பம் குளிர் மழை
திரை விமர்சனம் !!

ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் – திரவ் தயாரித்து,
பாஸ்கல் வேதமுத்துதேக்கி இயக்கி வெளிவந்திருக்கும் படம் வெப்பம் குளிர் மழை !

எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்!

இசை: ஷங்கர் !

மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கும் நாயகன் திரவுக்கும், நாயகி இஸ்மத் பானுவுக்கும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கவில்லை!

இதனால், ஊரார் எந்த பிரச்சனையாக இருந்தாலும் திரவ் – இஸ்மத் பானு தம்பதியின் குழந்தையின்மை பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசுகிறார்கள்.!

ஊரார், உறவினர் என சுற்றியிருப்பவர்களின் இத்தகைய பேச்சுக்களால் கஷ்ட்டப்படும் தம்பதி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.!

அதன்படி இருவரையும் பரிசோதித்ததில் திரவுக்கு பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது.!

ஆனால், இந்த விசயத்தை கணவரிடம் சொல்லாமல் மறைக்கும் இஸ்மத் பானு, அதே சமயம் குழந்தையின்மை பிரச்சனையால் தனது கணவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார்!

அந்த முடிவால் அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்க, சில வருடங்களில் அந்த குழந்தையாலேயே தம்பதி இடையே பெரும் பிரச்சனை ஏற்படுகிறது!

அந்த பிரச்சனை என்ன? என்பதை தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனையை மையமாக கொண்டும், அதற்கான அறிவியல் தீர்வையும், அதை ஏற்றுக்கொள்ள தயங்கும் மக்களுக்கு அறிவுரையாகவும் சொல்வதே ‘ இப்பத்தின் கதை !

நாயகனாக நடித்திருக்கும் திரவ், முதல் படத்திலேயே மிக வும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பாராட்டுக்கள் !

இஸ்மத் பானு, முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.!

இஸ்மத் பானு,
பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்று பொருத்தமான நடிப்பில் அனைவரும் இதயத்திலும் இடம் பிடித்து விட்டார் !

எம்.எஸ்.பாஸ்கர், கிராமத்து தாத்தாவாக நடித்து இன்றைய
தலைமுறைக்கு பாடம் கற்பித்திருக்கிறார் அருமை!

கதநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, மருமகள்,மகன் பாசத்தையும் மருமகள் யிடம் போடும் குடும்ப சண்டைகளும் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார்!

மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி, கருப்பு அனைவரும் கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!

பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் எடுத்த காட்சிகளும் அருமை !

இடத்துக்கு ஏற்ற காட்சிகளை படம்பிடித்தது நம் அனைவரையும் கிராமத்தை நோக்கி பயணம் செய்ய வைத்துள்ளது!

சங்கர் இசையில், திரவின் வரிகளில் பாடல்கள் அனைத்திலும் கிராமத்து வாசம் வீசுவதோடு, புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதையோட்டத்திற்கு உயிரோட்டம் அளித்திருக்கிறது.!

நாயகனாக நடித்து, படத்தை தயாரிக்கவும் செய்திருக்கும் திரவு தான் படத்தொகுப்பும் செய்திருக்கிறார். கஷ்ட்டப்பட்டு நடித்ததால் என்னவோ பல காட்சிகளின் நீளத்தை குறைக்க மனம் இல்லாமல் அப்படியே விட்டிருக்கிறார். அந்த காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருந்தாலும், அதன் நீளம் திரைக்கதையை சற்று தொய்வடைய செய்துவிடுகிறது. அதனால், காட்சிகளின் நீளத்தை சற்று குறைப்பது படத்திற்கு நல்லது

பல திரைப்படங்களில் சிறு பகுதியாக குழந்தையின்மை பிரச்சனை பற்றி பேசப்பட்டிருந்தாலும், இந்த படத்தின் மையக்கருவாக குழந்தையின்மை பிரச்சனை பற்றி பேசியிருந்தாலும், அதை சுற்றி வடிவமைக்கப்பட்ட திரைக்கதை ஜனரஞ்சகமாகவும், இயல்பாகவும் இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில்

*வெப்பம் குளிர் மழை’இன்றைய தலைமுறைக்கு ஒரு பாடம் !*

’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *