ஜெ.துரை
புனித வெள்ளி பவனி
வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை ஏசு சிலுவையை சுமந்து உயிர் நீத்த நாளான புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.
அதன் நினைவாக சென்னை பரங்கி மலையில் அமைந்துள்ள மான்போர்ட் பள்ளியிலிருந்து ஆல்வின் தாமஸ் அவரது தலைமையில் பவானியாக கத்திப்பாரா ஜங்ஷன்,பட்டு ரோடு, செயின்ட் பேட்டரிக் சர்ச், மற்றும் செந்தாமஸ் மலையை சுற்றி பவானியாக 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பதாகைள் தாங்கியபடி இயேசு வேடமடைந்த நபர் சிலுவையினை சுமந்து சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.
இயேசு நாதரின் தியாகத்தை போற்றும் வகையில் சிலுவையினை சுமந்து அவர் சென்ற காட்சிகளை தத்ரூபமாக சாலைகளில் நடித்து காண்பித்தும் அவருடைய போதனைகளை கூறியவாறு பரங்கி மலையை சுற்றி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு பேரணியாக சென்றனர்.