“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் படக்குழுவினர் கலந்துகொள்ள நேற்று இனிதே நடைபெற்றது.


இந்நிகழ்வினில் ..
நடிகர் டி எஸ் கே பேசியதாவது…,
“சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இயக்குனர் போன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.”


நடிகர் ஷாரா பேசியதாவது…,
” இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ், இயக்குனர் சந்தோஷ் மூவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி, காமெடி சீனை கொரியோகிராப் செய்வார், அது பலரிடத்தில் இருப்பது இல்லை. SMS போன்று இதுவும் ஒரு ஜாலியானா படமாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்

நடிகை பிரக்யா நாக்ரா பேசியதாவது..
” இது என்னுடைய முதல் படம். அதற்கு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். நான் முதன் முதலில் பார்த்த தமிழ் படம் சிவா மனசுல சக்தி படம் தான். ஜீவா போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. இது எனது கனவு நிஜமான தருணம். முதல் படத்திலயே மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய விஷயம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி.

இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசியதாவது..
இந்தப்படத்தில் கலகலப்பான ஜீவாவை மீண்டும் பார்க்கலாம். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது எனது கனவு அது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரக்யா குஜராத்தி பெண் ஆனால் அவர் ஒரு மலையாளி என அனைவரையும் நம்ப வைத்து விட்டார். அந்தளவு கதாப்பாத்திரத்தில் ஒன்றி நடித்தார். காஷ்மீரா அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் மிக ஜாலியான படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.

நடிகர் ஜீவா பேசியதாவது…,
“SMS படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாய் தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மிகவும் அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. கோவிட் காலகட்டத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார். பிரக்யாவை முன்னதாகவே சோஷியல் மீடியா மூலம் தெரியும். அவருடன் பகிர்ந்துகொண்டதும், படபிடிப்பு தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்த படம் உருவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


இத்திரைப்படத்தில், ஜீவா மற்றும் காஷ்மீரா பரதேசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரக்யா நாக்ரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சக்தி சரவணன் (ஒளிப்பதிவு), ஸ்ரீகாந்த் N.B. (எடிட்டிங்), மோகன் (கலை), சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), பிருந்தா (நடனம்), மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு ) பணிகளை செய்துள்ளனர்.
