இங்க நான் தான் கிங்கு திரை விமர்சனம்!!

Share the post

கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.  அன்புச்செழியன் சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்து ஆனந்த் நாராயண் இயக்கி சந்தானம் நடித்து வெளியா இருக்கும் படம்“இங்க நான் தான் கிங்கு

சந்தானம் வெற்றிவேல்
ப்ரியாலயா – தேன்மொழி
தம்பி ராமையா – விஜயகுமார் (ஜமீன்)
பாலா சரவணன் – பாலா (சின்னா ஜமீன்)
விவேக் பிரசன்னா – அமல்ராஜ்
முனிஷ்காந்த் – உடல் பல்ராம்
சுவாமிநாதன் – சுவாமி
மாறன் – ரோலக்ஸ்
சேசு – வினோத்

*குழு*

இயக்குனர் – ஆனந்த் நாராயண்
கேமராமேன் – ஓம் நாராயண்
இசையமைப்பாளர் – டி.இம்மான்
ஆசிரியர் – எம்.தியாகராஜன்
எழுத்தாளர் – எழிச்சூர் அரவிந்தன்
கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்.எம்
நடன இயக்குனர் – பாபா பாஸ்கர், கல்யாண்
ஃபைட் மாஸ்டர் – மிராச்சி மைக்கேல்
பாடலாசிரியர் – விக்னேஷ் சிவன், முத்தமிழ்
தயாரிப்பு நிர்வாகி – எம்.செந்தில் குமார்
உற்பத்திக் கட்டுப்பாட்டாளர் – எம்.பச்சியப்பன்
ஆடை வடிவமைப்பாளர் – ஆர்.கே.  நவதேவி ராஜ்குமார்
வாடிக்கையாளர் – ஆர்.முருகானந்தம்
சவுண்ட் மிக்ஸ் – டி.உதயகுமார், நாக் ஸ்டுடியோ, ஷேட் 69 ஸ்டுடியோஸ்
மேக்கப் மேன் – அ.கோதண்டபாணி
ஸ்டில்ஸ் – எஸ்.முருகதாஸ்
வண்ணக்கலைஞர் – பிரசாத் சோமசேகர்
புரோ – நிகில் முருகன்
வடிவமைப்புகள் – என்.டி.  பிராதூல்
கிரியேட்டிவ் எக்ஸிகியூட்டிவ் – ஜெயவேல்முருகன்
உற்பத்தித் தலைவர் – அனில் குமார் .எம்.கே
தயாரிப்பாளர் – ஜி.என் அன்புச்செழியன்
தயாரிப்பு – சுஷ்மிதா அன்புச்செழியன்

மேட்ரிமோனியில் வேலை பார்க்கும் சந்தானம், தனக்கு இருக்கும் ரூ.25 லட்சம் கடனை அடைக்க முன்வரும் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கிறார். பல பெண்கள் பார்த்து கடைசியாக அவருக்கு ஜமீன் குடும்பத்தில் இருக்கும் ஹீரோயினுடன் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்தபின்தான் தெரியவருகிறதுஅவர்களும் கடனில் இருப்பது. சந்தானத்திற்கு கடன் கொடுத்த விவேக் பிரசன்னாவுடன் ஏற்படும் பிரச்சினையில், சந்தானம் குடும்பத்தால் அவர் கொல்லப்படுகிறார். ஒருவழியாக இந்த கொலையை மறைத்து விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் அதே விவேக் பிரசன்னா சந்தானம் வீட்டில் உயிருடன் இருக்கிறார். அப்படி என்றால் கொலை செய்யப்பட்டது யார்? .. சந்தானத்தின் கடன் பிர்ச்சினை எப்படி தீர்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சந்தானம் நடிப்பு, சண்டைக்காட்சி பாடல்காட்சியில் ரொமான்ஸ் என புகுந்து விளையாடியிருக்கிறார்

. கதாநாயகி பிரியாலயா சிறப்பாக நடிப்பிலும் பாடல் காட்சிகளிலும் நன்றாக நடனம் ஆடி அசத்தியுள்ளார்.தம்பிராமையா, பாலசரவணன் இருவரது நடிப்பும் அசத்தல். விவேக் பிரசன்னா வரும் இடங்கள் நல்ல காமெடி. மற்றும் இதில் நடித்த மனோபாலா, முனீஸ்காந்த், , லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன் என அனைவருமேகொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர். .

இமான் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது

.ஓம் நாராயணன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

எழிச்சூர் அரவிந்தனின் கதை நகைச்சுவையை அள்ளித் தெளித்து எல்லோரும் ரசித்து சிரிக்கும்படி கொடுத்துள்ளார்

இயக்குநர் ஆனந்த் நாராயணன். இயக்குநர் பணியை சிறப்பாக செய்திருக்கிறார் பாராட்டுக்கள்

மொத்தத்தில்

*காமெடி சரவெடி!!*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *