
”வைகறை வணக்கம்”
உண்மை உடனுக்குடன் என உரக்கச் சொல்லி நேயர் விரும்பும் செய்திகளை காலை 6
மணிக்கு ‘வைகறை வணக்கம்’ என்ற பெயருடன் செய்திச்சேவையை தொடங்குகிறது
புதிய தலைமுறை தொலைக்காட்சி.
காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை ஒளிபரப்பாகும் வைகறை வணக்கத்தில்
முந்தைய நாளின் முதன்மை செய்திகள், இரவில் நாம் காணத்தவறிய செய்திகள்,
நாளிதழின் தலைப்புச் செய்திகள், மாநிலம் மற்றும் மாவட்டம் சார்ந்த நிகழ்கவுகள்
கோர்வையாக வழங்கப்படுகிறது. அன்றைய தினத்தில் நடக்கப்போகும் முக்கிய
நிகழ்வுகள் குறித்த அலசல், தேசியச் செய்திகள், அரசியல் நகர்வுகள் என பல்வேறு
அம்சங்களும் வைகறை வணக்கத்தில் வலம்வரும். வானிலை, அணை நிலவரம் மற்றும்
விவசாயம் குறித்த செய்திகளும் உள்ளன.
விளையாட்டுலகின் சுவாரசியங்கள், சமூக வலைதளத்தளங்களில் பேசுபொருளாக
அமைந்த செய்திகள், பக்தி மணம் கமழும் ஆன்மிகச் செய்திகள், நேயர்களின்
எண்ணத்தை வசப்படுத்தும் வணிகச் செய்திகள், வெள்ளித்திரை, சின்னத்திரை
விரும்பிகளின் கவனத்தை ஈர்க்கும் செய்திகளின் கூட்டுக் கலவையாக
ஒளிபரப்பாகிறது வைகறை வணக்கம்.