அக்னி குஞ்சொன்று கண்டேன் ‘ என்ற பெயரில் ஒரு புது திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்
அகரன்!!

இயக்குனரும், நடிகருமான அகரன் ‘கேமரா எரர் ‘ என்ற திரைப்படத்திற்கு அடுத்ததாக, கல்வியை ஊக்குவிக்கும் விதமாக
‘ அக்னி குஞ்சொன்று கண்டேன் ‘ என்ற பெயரில் ஒரு புது திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இந்தப் படத்தின் கதை, நெய்வேலி பகுதியில் இருக்கிற தொழிற்சாலையில் இருந்து வரும் மாசு காரணமாக, அதைச் சுற்றி வாழும் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்….? ஏழை குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன…? அதனால் படிக்கும் குழந்தைகளின் கல்விக்கு எவ்வாறு தடங்கல்கள் ஏற்படுகிறது….? அதை மீறி அந்த குழந்தைகள் எவ்வாறு படிக்கின்றனர் என்பதை மையமாக வைத்து,குழந்தை கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ‘அக்னி குஞ்சொன்று கண்டேன் ‘ திரைப்படம்….

நித்திகா, அஸ்வின் குமார், மீனா, யுவராஜா, பெண்ணாடம் சத்யராஜ், சுக யோக குணசேகரன் மற்றும் அகரன் நடித்திருக்க,
இப்படத்தின் எழுத்து- இயக்கம் -ஒளிப்பதிவு பணியை செய்திருப்பவர் அகரன். அதேபோல் வசன பணியை அகரன் மற்றும் ஜி முரளி மேற்கொண்டு இருக்க, இசை அமைத்து இருப்பவர் ஷரவன் கலை. பாடல்களை இரமணி காந்தன்,கதிரவன், முருகானந்தம் எழுதியிருக்க, S2 மீடியா நிறுவனம் சார்பில்
சுதா செந்தில்ராஜ் தயாரித்திருக்கிறார்.
Tag
Tag
Agaran
Agaran Director
Agaran Actor
Children movie
Children motivation movie
Tamil cinima
S2 medias
Camera error movie
Camera error
@Agni kunguonru @kandaen movie
.