மும்முனை மகிழ்ச்சியில் பிறந்த நாள் தேவதை ஹன்ஷிகா மோத்வானி !



தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது பிறந்த நாளை, எப்பொழுதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதே வழக்கம். இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல. சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்தில் அவர் பங்களிப்பில் அவரது பிறந்த நாள் கோலகலமாக கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் மும்பையில் தன் குடும்பத்துடன் இந்த சந்தோஷ தருணத்தை பகிர்ந்துகொண்டாடிய அவர்,தான் மும்பையில் தத்தெடுத்த பெண்களுடன் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார். தான் பொறுப்பெடுத்துகொண்ட கேன்சரால் பாதிக்கப்பட்ட 10 பெண் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளை முழுவதுமாக இவரே ஏற்றுக்கொண்டுள்ளார். அவர்கள் அனைவரையும் முழுமையாக குணமடைய செய்து சாதாரண வாழ்க்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் தற்போது உள்ளார். மேலும் சென்னை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு தான் வரும் பொழுதெல்லாம் உணவு வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.



இந்த முறை, பிரபஞ்சம் அவரது பிறந்த நாளை மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றியுள்ளது. ஒரு புறம் தனது பிறந்த நாளை ஆதரவற்றவர்களுடன், அர்த்தமுள்ளதாக அவர் கொண்டாட, திரையுலகை சேர்ந்த நண்பர்கள் அவரது பிறந்த நாளை பிரமாண்டமானதாக மாற்றியுள்ளனர், அவர் நடித்து வரும் My Name is Shruthi, மற்றும் பரபர திரில்லரான One Not Five Minutes படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவர் பிறந்த நாளை ஒட்டி கோலகலகமாக வெளியாகியுள்ளது. மேலும் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக, நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50 வது படமான ” மஹா ” படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் அவரை பெருமைப்படுத்தும் வகையில் ” A Glimpse of Princess work ” என்ற தலைப்பில் இன்று மாலை 6 மணிக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளார்.



அனைத்து புறங்களில் இருந்து வாழ்த்து மழையிலும், புகழ் மழையிலும் நனைந்து வருகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி.
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளை ஒட்டி, பொது மக்களிடம் சில வேண்டுகோளை வைத்துள்ளார்.மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் , தங்களது கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், உயிரை பறிக்க கூடிய கொரோனா நோய்க்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை, அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும், என அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.