கலைஞர் டிவியில் ஜி.வி.பிரகாஷின் “ஜெயில்”

புத்தம் புதிய நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என உங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற மார்ச் 13-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம் “ஜெயில்” ஒளிபரப்பாக இருக்கிறது.


“வெயில்”, “அங்காடித் தெரு” என அழுத்தமான படங்களை கொடுத்து “தேசியவிருது” வென்ற இயக்குனர் வசந்தபாலனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பில், சென்னை வாசிகளாக ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார், நந்தன்ராம், பசங்க பாண்டி மற்றும் ரவி மரியாவின் அசத்தலான நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “ஜெயில்” படம் ஒளிபரப்பாக இருக்கிறது.


சென்னையின் பூர்வகுடிகளின் கட்டாய இடமாற்றத்தால், குற்றவாளிகளாக்கப்படும் இளைஞர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் சென்னை மனம் மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.