800 உலக நடனக் கலைஞர்கள் இணையதளத்தின் மூலம் இணைந்து தமிழன்னைக்காக தமிழால் நிகழ்த்தியகின்னஸ் சாதனை
ஆகஸ்ட் 1














– உலகிலுள்ள 800 நடனக் கலைஞர்கள் இணைந்து இணையதளத்தின் மூலம் தமிழன்னைக்கு தமிழால் நிகழ்த்திய கின்னஸ் சாதனை நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி சரியாக 6.30 மாலை கலைமாமணி மதுரை இரா முரளிதரன் அவர்களின் இயக்கத்தில் அவரால் இயற்றப்பட்ட அவரால் கற்றுத் தரப்பட்ட வர்ணத்தை உலகக் கலைஞர்கள் இணைந்து நடனத்தின் மூலம் அவர்களின் அஞ்சலியை அளித்ததோடு அல்லாமல் இதன் மூலம் திரட்டப்பட்ட சுமார் 10 லட்சம் தொகை தமிழக முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது மதுரை இரா முரளிதரன் அவர்களின் மூன்றாவது கின்னஸ் உலக சாதனை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 800 உலக நடன மணிகளை ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் ஆட்டிவைத்த நிகழ்வின் மூலம் இவர் தற்போதைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
