
“குட் டே” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:-
பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட் , மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள்,வேல ராமுர்த்தி, விஜய் முருகன், ஜீவா சுப்ரமணியம், பாரத் நெல்லையப்பன்.
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் :- என்.அரவிந்தன்.
மியூசிக் : – கோவிந்த் வசந்தா
தயாரிப்பாளர்கள் :- நியூ மானக் பிக்சர்ஸ் – பிரித்திவிராஜ் ராமலிங்கம்.
தப்பு செய்த மேலாளரை ஒருவர் தட்டிக் கேட்டால் அதற்காக உழைத்த
சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் நிறுவனங்கள் நிறைய உள்ளன.அதுல உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் தான்
அம்மாவிற்கு மருந்து செலவுக்கு பணம் அனுப்பினால்
அதை கூடக்கேட்டு தான் கொடுக்க வேண்டும். கணக்கு கேட்கும் கோபித்துக் கொள்ளும் மனைவி,
ஆள் இல்லாத வாசலுக்கு கோலம் போட பணம் கேட்பது
என்ன நியாயம்? நாங்கள் ஏன்?
எதனால் தரவேண்டும் என்று நியாயத்தை கேட்கும் குடியிருக்கும் கதாநாயகன்.
வீட்டின் ஒனர்.அதை
கேட்டால், வீட்டை காலி செய்ய முடியாது என்று சொல்லும் குடியிருக்கும் வாடிக்கையாளர்,
தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கம்பெனியில் பணிபுரியும் பெண் , ஆயிரம்
ரூபாய் கடன் கேட்டால், எதை எடுத்துக் கொடுக்க,
என்று சொல்லும்
மேனேஜர் நண்பர்கள் என்றுஒரு நாள்முழுவதும்பல
அவமானங்கள் ஏமாற்றங்கள் என்னெற்றவைகள்.
கடந்துச் செல்லும் கதாநாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம்,
அத்தனைக்கும் ஒரே தீர்வு மது தான் என்று நினைத்து அன்றைய இரவு முழுவதும் மது
குடிக்கிறார். அந்த போதையில் ஆரம்பத்தில் அவருக்கு
ஆனந்தம், இன்பம், கிடைத்தாலும், அந்த ஆனந்தமே அடுத்த
சில மணி நேரத்தில் அவரை பெரிய சிக்கலில் சிக்க வைத்து விடுகிறது.
தான் செய்வது தவறு என்று தெரியவில்லை. தெரியாமல் இரவு முழுவதும் போதைக்கு அடிமையாக பயணிக்கிறார் .
இதனால் நாயகனுக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது.
காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்கும்
பணியில் தீவிரம் காட்டி வரும் காவல்துறையினர், கதாநாயகனின் போதையால்
பாதிக்கப்பட, குழந்தையை தேடும் காவல்துறையினர்.
நாயகனை தேடி கண்டுபிடிக்கும் வேலையை ஈடுபடுகிறது.
கடைசியில் நாயகனின் போதை பழக்கம் அவரை எங்கு கொண்டு போகிறது?,
காணாமல் போன குழந்தை கிடைத்தா? இல்லையா? என்பதை ஒரு இரவு பயணமாக சொல்வதே “குட் டே”
படத்தின் கதைக்கான கதைக்களமாகும்.
உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்
பவர் மது போதைக்கு எப்படி அடிமையாகிறார்கள்
அவர்கள் எப்படி எல்லாம் அவமானங்களை எடுத்திக் கொள்கிறார்கள்,
என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கதையை உணர்ந்து
நடித்துள்ளார் கதாநாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம்.
மது போதையின் ஒவ்வொரு தடவையும் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கச்சிதமாக
வெளிக்காட்டி நடித்துள்ளார் பிரித்திவிராஜ். ராமலிங்கம், தனது உடல் மொழி மூலம் வசனம். ஆகியவற்றின் மூலம் தனது குடி போதையின் காட்சி மூலமாக அபாரமாக நடித்துள்ளார்.
எந்த இடத்திலும் ஓவராக நடிக்காம தனது கதாபாத்திரங்
களுக்கு ஏற்பே நடிப்பின் மூலம் காட்சிகளுக்கு மெருக்கேற்றி நடித்து இருக்கிறார்.
நாயகனின் கல்லூரி தோழியாக நடித்திருக்கும்
மைனா நந்தினி ஒரு சிலகாட்சிகள் வந்தாலும் நடிப்பில் அசத்துள்ளார்.
எல்லா ஏக்கத்தை தனது முகத்தில் காட்டி அந்த அசத்தும்
காட்சியில் எல்லாரை சிரிக்க வைத்திருக்கிறார்.
மைனா நந்தினியின் கணவராக
நடித்துள்ள ஆடுகளம் முருகதாஸ் வரும் காட்சிகளில் அருமை.
நடித்திருக்கிறார்
ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ள காளி வெங்கட், தையல்காரராக நடித்துள்ள பகவதி பெருமாள்,
இடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்பவராக நடித்துள்ள வேல ராமமூர்த்தி,
அறிவுரை சொல்லுபவராக நடித்துள்ள போஸ் வெங்கட், போலீஸ்
இன்ஸ்பெக்டராக நடித்துள்ள விஜய் முருகன் ஆகியோர்.
கதாநாயகனின் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்துள்ளனர் இவர்கள் அனைவரும்
கடந்து போகிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசையில்
பாடல்களும், பின்னணி இசையும் அனைத்தும் எளிமை கடந்து போகின்றன,
திரைக்கதை, காட்சி மற்றும் கூடுதல் வலிமை பெருகின்றன .
ஒளிப்பதிவும் மற்றும் படத்தொகுப்பும்
இரண்டு பணிகளை செய்துள்ளார் மதன்
குணதேவ்,
கதை முழுவதும் இரவு நேரங்களில் நடந்தாலும், அந்த உணர்வை
பார்வையாளர்கள் மீது ஏற்படும் வகையில் விளக்கின் ஒளியில் பயன்படுத்தி
காட்சிகளை படமாக்கியிருக்
கிறார்கள்.
காட்சிகள் அனைத்தும் சாலைகளில் நடந்தது
என்றாலும்
விளக்குகளின் ஒளி வெளிச்சத்திலே வேறுபாட்டோடு காட்சி படுத்தியுள்ளார்கள்.
மதுபிரியர்கள் அதிக போதையில் சில சமயங்களில்
ஏற்படும்.
சம்பவங்களை மையமாக வைத்து
பிரித்திவிராஜ் ராமலிங்கம்
எழுதியுள்ளார்.கதை கரு, பூர்ணா ஜெஸ் மைக்கேலின்
திரைக்கதை மற்றும் வசனம் மது பிரியர்களுக்கான
அறிவுரையாகவும் அவர்களின் உளவியல் நடக்கும் பல பிரச்சனைகளை பேச வேண்டி உள்ளது. அவை அனைத்தும்.
அமைந்துள்ளது மன அழுத்தம் மது தான் தீர்வு அல்ல, மேலும் மேலும் மன அழுத்தத்தை தரும் என்பதை சொல்ல போகிறது. சொல்லிவிட்டு, இறுதியில் கொஞ்சம் புத்தியை சொல்ல வருகிறது.
கார்த்திக் நேத்தாவின் பாடல் மற்றும் கூடுதல் வசனத்தை விட, அவர் நடித்திருக்கும்
சாமியார் கதாபாத்திரம்
கவனம் ஈர்க்கிறது.
குடித்துவிட்டு ரகளை செய்பவர்களை, அவர்களின் செயல்களையும்,
கேவலமான பார்க்கும்
மனிதர்களுக்கு, அவர்களின் உளவியல் ரீதியான விஷயத்தை பிரச்சனைகள் அதனால் அவர்கள்
எந்த வகையில் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை உணர்வு
பூர்ணமா வைக்கும் வகையில் படத்தை இயக்கியிருக்கும்
இயக்குநர் என்.அரவிந்தன்,
பார்வையாளர்களை யோசிக்கவும் வைத்திருக்கிறார்.
இரவு பத்து மணிக்கு மேல் சரக்கு கிடைப்பதே பெரும் கஷ்டங்கள் இருக்கும் நிலையில்,
பயணப்படும் கதாநாயகன். போகும் இடம் எல்லாம் அவருக்கு சரக்கு
கிடைப்பது தான் கொஞ்சம் வியப்படைய
செய்கிறது. மற்றும் படத்தில் குறை இல்லை, நாயகனின் போதை போல் படம்
பார்வையாளர்களை முழுமையா திருப்திப்படுத்தும்.
வகையில் அமைந்துள்ளது.
“குட் டே”
படம்ப் பார்த்தத்தில்,
மது குடிப்பதால் ஒருவர் குடிப் போதைக்கு பழக்கத்திற்கு
அடிமையாகிறார்
அந்த குடும்பத்தையும் அந்த தலைவனாலே
காப்பாற்ற முடியாது.
அதனால் குடி குடும்பத்தை கெடுக்கும் என்ற பழமொழி ஆகிறது.
என்பதை இந்த படத்தின் கருத்தை
வலியுறுத்திச்
சொல்லியிருக்கிறார்ஆனால்
குடிக்காரனாக நடித்த கதாநாயகன். பிரித்தி விராஜ் என்ன தான்
குடித்து இருந்தாலும் அவர் காவல் துறையினரிடமும் அதிகாரிகளிடமும் அவர் செய்யும்
அளப்பரியலை நம்மையும் பார்வையாளர்களை நம்பமுடியாதவைகள்.