உலகளாவிய படைப்புகள் உள்ளூரில்: டாடா ப்ளே பிஞ்ச்-இல் 26-வது செயலியாக சேர்கிறது வ்ரூட்(VROTT)
- ஆங்கிலம், இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட உலகளாவிய சிறந்த படைப்புகளை வ்ரூட்(VROTT) மூலம் இப்போது, டாடா ப்ளே பிஞ்ச்-இல் காணலாம்.
மும்பை, 4 மே 2023: அதன் ஒவ்வொரு சேவைகளின் மூலமாக பெரிதாகவும், சிறப்பாகவும் பரிணமித்து வரும் டாடா ப்ளே பிஞ்ச் தற்போது வ்ரூட்(VROTT) செயலியை அதன் தளத்தில் சேர்த்து உலகளாவிய படைப்புகளை உங்கள் இல்லங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது.உலகளாவிய படைப்புகளை உள்ளூரில் வழங்கும் ‘குளோபல் கா லோக்கல்’ எனப்படும் இந்த செயலியானது, நேயர்களுக்கு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய படைப்புகளை இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய உள்ளூர் மொழிகளுடன் சேர்த்து அப்படைப்பின் அசல் மொழியிலும் வழங்கவுள்ளது. டாடா ப்ளே பிஞ்ச் தளத்தில் ஏற்கனவே உள்ள 25 இதர பிரபல செயலிகளின் பட்டியலில் வ்ரூட்(VROTT) இப்போது 26-வது OTT செயலியாக இணைகிறது.
பிரத்தியேக சிறப்புத் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ் உட்பட 2000+ மணிநேரத்திற்கும் அதிகமான உலகாளாவிய படைப்புகளை வ்ரூட்(VROTT) வழங்குகிறது, அதில் ஆக்ஷன், கிரைம், மிஸ்ட்ரி, திரில்லர், ஹாரர் மற்றும் டிராமாக்கள் என பல வகையான படைப்புகள் உள்ளன. இந்த பொழுதுபோக்குத் தளமானது வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்திய மொழிகளில் புதிய படைப்பை வெளியிட்டுவருகிறது. அவர்களின் மாறுபட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பில் இங்கிலாந்து (UK) கிரைம் திரில்லர்கள், கொரிய ஆக்ஷன் டிராமாக்கள், ரஷ்ய மாஃபியா த்ரில்லர்கள், ஹாங்காங் தற்காப்பு கலை படங்கள், துருக்கிய குடும்ப நாடகங்கள், ஸ்காண்டிநேவிய சீரிஸ், மற்றும் ஐரோப்பா முழுவதிலும் இருந்து வரும் க்ரைம் த்ரில்லர் படைப்புகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க பிரபல படைப்புகள் பின்வருமாறு: ஸ்கின்ஸ், அஃபிஷியல் காம்பெட்டிஷன், கிளிக், ஜீப்பர்ஸ் க்ரீப்பர்ஸ்: ரீபார்ன், யூ கீப் தி கிட்ஸ், வெடிங் அன்பிளானர், தி ஐஸ்பிரேக்கர், தி ஹெவி வாட்டர் வார், வெல்கம் டூ டெக்சாஸ் S1 மற்றும் பல.
இந்த புதிய பார்ட்னர் செயலியை இணைத்துள்ளது பற்றி பேசிய, டாடா ப்ளேவின் தலைமை கமர்ஷியல் மற்றும் கன்டென்ட் அலுவலர், பல்லவி பூரி அவர்கள், “ வ்ரூட்(VROTT)-உடன் இணைந்து உலகெங்கிலும் ரசிக்கப்படும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பலவற்றை எங்கள் நேயர்களுக்கு கொண்டு வருவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் வெளிநாட்டு படைப்புகளை காண்பதற்கான ஆவல் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, மற்றும் வ்ரூட்(VROTT) போன்ற தளங்கள், பல்வேறு நாடுகளிலிருந்து மற்றும் பல கலாச்சாரங்களை உள்ளடக்கிய பல்சுவை படைப்புகளை நேயர்களுக்குப் புரியும் மொழியில் வழங்கி, அவர்களது ரசனையை விரிவாக்குகின்றன. இது டாடா ப்ளே பிஞ்ச் நேயர்களுக்கு ஒரு அட்டகாசமான பொழுதுபோக்கு வாய்ப்பாக இருக்குமென நாங்கள் உறுதியாக நம்புகிறோம்”, என்று கூறினார்.
வ்ரூட்(VROTT) தளத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனீஷ் தத் அவர்கள் இது குறித்து பேசுகையில், “டாடா ப்ளே பிஞ்ச்-உடன் இணைந்து அவர்களின் தளத்தில் பார்ட்னர் ஆவதில் எங்களுக்கு மிகுந்த சந்தோஷம். நிகழ்ச்சிகள் குறித்த இந்திய நுகர்வோரின் ஆவலும், ரசனையும் அதிகரித்துள்ளது மட்டுமின்றி, பூகோள எல்லைகளை சிறிதாக்கும் வகையில் உலகாளாவிய பல்சுவை படைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்கள் பரிணமித்துள்ளனர். தரமான கதைகள் மற்றும் சிறந்த தயாரிப்புகள் அதிகம் நாடப்படுவதாகவும், பலராலும் எப்போதும் விரும்பப்படுவதாகவும் உள்ளன. டாடா ப்ளே பிஞ்ச் உடனான எங்களது இந்த கூட்டணியின் மூலம் –எங்களால் அதிகபட்ச அளவில் இல்லங்களை சென்றடைய முடியும் என்பதாலும், பல மொழிகளைப் பேசும் பன்முகத்தன்மை கொண்ட இந்திய நேயர்களுக்கு அவரவர் தாய் மொழிகளில் வ்ரூட்(VROTT) நிகழ்ச்சிகளை வழங்க முடியும் என்பதாலும் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்,” என்ற அவர், “அடுத்த 100 மில்லியன் VOD சந்தாதாரர்களை பெறவேண்டும் என்பதற்காக அனைவரின் கவனமும் பிராந்திய மொழி படைப்புகளின் மீதே இருக்கும். டாடா ப்ளே பிஞ்ச்-உடனான இந்த கூட்டணியின் மூலம் மலையாளம், கன்னடம், பங்களா, மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் படைப்புகளை வழங்கி மெட்ரோ மாநகரங்கள் மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் உட்புற B & C மார்கெட்களிலும் தடம் பதிப்பதில் வ்ரூட்(VROTT) கவனம் செலுத்தும்,” எனவும் தெரிவித்தார்.
வ்ரூட்(VROTT)தளமானது, பிஞ்ச் தளத்தில் உள்ள மற்ற 25 பிரபல OTT தளங்களான ஆஹா, டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜீ5, MX ப்ளேயர், சோனிLIV, ரீல் டிராமா, வூட் செலக்ட், ஹோய்சோய், பிளானட் மராத்தி, நம்மஃபிளிக்ஸ், சௌபல், சன்நெக்ஸ்ட், ஹங்காமா ப்ளே, எராஸ் நவ், ஷீமாருமீ, வூட் கிட்ஸ், மனோரமாMAX, கூடே, தாரங் பிளஸ், க்யூரியாஸிட்டி ஸ்ட்ரீம், எபிக் ஆன், ஷார்ட்ஸ்TV, டிராவல்xp, மற்றும் டாக்குபே ஆகியவற்றின் பட்டியலில் இணையவுள்ளது. மேற்கூறிய அனைத்து தளங்களிலிருந்தும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் டாடா ப்ளே பிஞ்ச் நேயர்களுக்கு ஒற்றை சந்தா மற்றும் ஒரே யூசர் இன்டர்ஃபேஸ் மூலமாகக் கிடைக்கும். மற்றொரு பொழுதுபோக்கு அம்சமாக டாடா ப்ளேவில் இலவச கேமிங்கும் உள்ளது. ஒருங்கிணைந்த நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ பிளான்கள் டாடா ப்ளே DTH சந்தாதாரர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது. டாடா ப்ளே பிஞ்ச்+ ஆண்டிராய்டு செட் டாப் பாக்ஸ், அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக், மற்றும் www.TataplayBinge.com ஆகியவற்றின் மூலம் இணைக்கப்பட்ட சாதனங்களின் பெரிய திரைகளில் இந்த 26 செயலிகள் அனைத்தையும் நேயர்கள் கண்டு மகிழலாம்.