இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பின்னணி இசை, பாடல்கள், தமிழ் ஃபோக் பாடல்களில் இருந்து பெற்ற கூறுகள் மற்றும் பலதரப்பட்ட கலைஞர்களுடன் இணைந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இசை ரசிகர்களையும், ஆர்வலர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமான இசையைக் கொடுத்து வருகிறார்.
மில்லியன் கணக்கான இதயங்களை வென்றதை அடுத்து, தற்போது அவர் தமிழ் இசையை உலகிற்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். என்ஜாய் எஞ்சாமி பாடல் பெற்ற சர்வதேச அளவிலான வெற்றி மற்றும் நீயே ஒளி பாடல் அதன் வெப்பமூட்டும் இசைக்காக ஜூனோ விருதுகள் போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் இருந்து அவருடைய தனித்துவமான தயாரிப்பு பாணி புலப்படும்.

மார்ச் 18, 2023 அன்று மலேசியாவில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் நடைபெற உள்ள ‘Sounds of the South’ கான்செட்டில் சந்தோஷூடன் இணையுங்கள். தென்னகத்தின் ஒலிகளையும் அதன் ஆழமான வேர்களையும் கொண்டாடும் வகையிலான இந்த கச்சேரியில் கலந்து கொள்ள வாருங்கள். ரெளடி பேபியில் ஆரம்பித்து ரக்கிட ரக்கிட, ஏரியா கானா, நெருப்புடா வரை, என்னடி மாயாவியில் இருந்து ஏய் சண்டக்காரா வரை பல பாடல்களும் இந்த லைவ் கான்செட்டில் இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.



